ஆப்பிளும் நான்தான்... ஆண்ட்ராய்டும் நான்தான்... மொபைல் உலகில் ஒரு ‘சிவாஜி’!Sponsoredபத்திரிகைகாரரான எனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் அவசியம். ஆப்பிளில் கால் ரெக்கார்டு செய்ய முடியாது. ப்ளூடூத்தில் பாடல்களை அனுப்ப முடியாது, பிடித்த ரிங்டோனை நினைத்த மாத்திரத்தில் டவுன்லோடு செய்து வைக்க முடியாது என ஐஃபோனை நிராகரிக்க சில காரணங்களை சொல்லலாம். ஆனால், இவற்றையெல்லாம் மீறி ஐஃபோன் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் ஆப்பிள் யூஸர்களால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். அதனாலே, பெரும்பாலான ஆப்பிள் யூஸர்ஸ் இரண்டு மொபைல்களுடன் அலைவர். ஓர் ஐஃபோன். ஓர் ஆண்ட்ராய்டு. இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை கொண்டு வந்திருக்கிறது ”ஐ”.

உண்மையிலே ”ஐ” முழுமையான தீர்வுதானா என்கிற ரிவ்யூவை பிறகு அலசுவோம். முதலில், இது என்ன விஷயம் என்பதை பார்த்து விடுவோம். இது ஐஃபோனுக்கு ஒரு பேக் கேஸ்(Back case) போலதான். ஆனால், பின்னால் இருப்பது ஒரு ஆண்ட்ராய்டு மொபைல். சர்ப்ரைஸ் தானே?

Sponsored


‘ஐ’ கிட்டத்தட்ட ஒரு மொபைல் போல செயல்படுகிறது. ஆப்பிளின் ஸ்பீக்கர், மைக்ரோபோன், கேமரா போன்ற காஸ்ட்லி விஷயங்களை ஆப்பிள் ஃபோனில் இருப்பதையே இதுவும் பயன்படுத்துகிறது. மற்ற விஷயங்களுக்கு எல்லாம் தன்னகத்தே தனி ஹார்டுவேர்  வைத்திருக்கிறது ஐ. இந்தப் பக்கம் பார்த்தால் ஆப்பிள் ஐஃபோன். திருப்பி பார்த்தால் ஆண்ட்ராய்டு. வாவ்!

Sponsored


இதில் இரண்டு சிம் கார்டுகள் போட்டுக்கொள்ள வசதி உண்டு. ஹெச்.டி படங்களாக சேமித்து வைக்க மெமரி கார்டு ஸ்லாட் உண்டு. இதற்கு தனியே பேட்டரி உண்டு. எனவே ஆப்பிளிடம் இருந்து கரண்ட்டை கடன் வாங்காது “ஐ”. 5இன்ச் ஸ்க்ரீனும் தனி. சுவாரஸ்யம்தான்.

புராசஸர் இன்னபிற விஷயங்கள், ஒரு நல்ல ஆண்ட்ராய்டு மொபைலுக்கு இணையாக இருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், இது செகண்ட்ரி மொபைல் என்னும்போது அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. 

ஆப்பிள் பேக் கேஸ் தானே ஐ? பிறகு இரண்டு பக்கமும் ஸ்க்ரீன் என்றால் மொபைல் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அது பற்றி இதன் நிறுவனர்கள் எதுவும் சொல்லவில்லை. 

மொபைல் உலகில் முன்னணியில் இருக்கும் இரண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆப்பிளும், ஆண்ட்ராய்டும்தான். இரண்டையும் ஒரே கருவியில் கொண்டு வர முடியும் என்ற ஐடியாவே சுவாரஸ்யமானது. அதை சாத்தியப்படுத்த ஐ சொல்லும் வாய்ப்புகள் எல்லாமே எளிமையானவை. மேலும், இரண்டு கேமரா, இரண்டு மைக் என தேவையற்ற செலவுகளையும் இது குறைக்கிறது. அதே சமயம் பேட்டரி போன்ற முக்கியமான விஷயங்களை தனித்தனியே கொண்டிருப்பது நல்லது. ஸ்க்ரீனும் வேறு வேறு என்பதால், இரண்டு மொபைல்களும் தரும் அனுபவம் முற்றிலும் வேறு வேறாக இருக்கும். 

இப்போது புரொட்டோ டைப் மாடலை தயார் செய்திருக்கிறார்கள். மார்க்கெட்டுக்கு வரும்வரை காத்திருப்போம். அதற்குள் இந்த டிசைன் இன்னும் அழகாகலாம். கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப்படலாம்.சார்ஜ் குறைந்து போனால் இரண்டு மொபைலும் ஒன்றுக்கொன்று கரண்ட்டை கடன் தரும் வசதி கூட வரலாம்.

எப்படி இருந்தாலும் இது போன்ற புது முயற்சிகள் வெற்றியடைய வேண்டும். டெக்னாலஜியின் அடிப்படை எளிமையும், சிக்கனமுமாகத்தான் இருக்க வேண்டும். “ஐ” அப்படியொரு டெக்னாலஜியாக வர வாழ்த்துவோம்.

- கார்க்கிபவாTrending Articles

Sponsored