#Wkkb... பாகுபலி 2-வின் இந்த ஹேஷ்டேக் என்ன..? கண்டுபிடியுங்கள்..! #TrendsTodaySponsoredஇன்றைய சுவாரஸ்யமான ட்ரெண்டிங் ஹேஷ்டேகுகள் இதோ.. #Trends

mathusudhanan

Sponsored


அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணினு பிரிஞ்சு இருக்கு. சசிகலா அணி சார்பா நேத்து டிடிவி தினகரன் வேட்பாளரா அறிவிக்கப்பட்டாரு. இன்னிக்கு ஓபிஎஸ் அணி வேட்பாளரா மதுசூதனன் அறிவிக்கப்பட்டு இருக்காரு. 1991ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிட்டதும் ஆர்.கே நகர் தொகுதி தான். மறுபடியும் அதே தொகுதியில் போட்டியிடும் அவருக்கு வாக்கு வங்கி எப்படி இருக்குங்கறது அவங்க கவலை. கூகுள்ல இவர் பேர தேடினா ஓ.பி.எஸ் படம் வர்றது தான் நெட்டிசன்ஸ் கவலை..

Sponsored


Maxwell 82

”திரும்ப வந்துட்டேன்னு சொல்லு, எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” அப்படினு ஸ்டைலா, கெத்தா என்ட்ரி கொடுத்துருக்காரு ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல். 2014க்கு அப்பறம் டெஸ்ட் போட்டில தல காட்டாம இருந்த மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 82 ரன் அடிச்சு கலக்கல் என்ட்ரி கொடுத்துருக்காரு. டி20ல தான் பந்த மேல பறக்கவிட்டு மேஜிக் காட்டுவாருன்னு தெரியும். இன்னிக்கு அஸ்வின், ஜடேஜா ஓவர்ல பறக்க விட்ட சிக்ஸர் கண்ணுக்குள்ளயே இருக்கு. பாலுதான் கிரவுண்டுக்கு வெளிய கெடக்கு.

பாகுபலி 2 #WKKB

பாகுபலி ட்ரெய்லர் காலைல சமூக வலைதளங்கள்ல லீக் ஆச்சு. ஆனா படக்குழு உடனே சுதாரிச்சு ட்ரெய்லர அதிகாரப்பூர்வமா ரிலீஸ் பண்ணி சும்மா வியூஸ்  அள்ளிடுச்சு. வாவ்... ”வாட் எ மேக்கிங்”னு சொல்ல வைச்சிருக்குற இந்த ட்ரெய்லர்ல முடியும் போது ஒரு ஹேஷ்டேக் வருது. ஆரம்பத்துல குழம்பிய பலர் கடைசியா ஹேஷ்டேக்க கண்டு புடிச்சுட்டாங்க. . #WKKB அப்படின்னா  Why Kattappaa Killed Baahubali. ஆனா அதுக்கு பதில் தான் பல வருஷமா தெரியல.

#motog5plus

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான motog5plus இன்று வெளியானது 14000, 16000 ரூபாய் ஆகிய இரண்டு விலைகளில் வெளியாகியுள்ள இந்த போன் தான் இன்றைய இந்தியாவின் டாப் ட்ரெண்ட்.. 12 மெகாபிக்ஸல் கேமரா, 3000 மில்லி ஆம்ப்ஸ் பேட்டரி திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது மோட்டோ ஜி 5 ப்ளஸ். இந்த போன் ப்ளிப்கார்ட்டில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

#Trapped17March

ட்ரேப்டு (Trapped) படம் ட்ரெய்லரே மிரட்டலா இருந்துச்சு. அவசரமா கால் வந்து அத எடுக்க போன ஒருத்தன் பெரிய அப்பார்ட்மெண்ட்ல டாப் ஃப்ளோர்ல இருக்கிற வீட்ல எந்த கம்யூனிகேஷனும் இல்லாம லாக் ஆகிடுறான்.  பரபரப்பான ட்ரெய்லர் அப்பவே வைரல் ஆச்சு. நாளைக்கு ரீலீஸ் ஆகப்போற அந்த படம் இன்றைய ட்ரெண்ட் ஆஃப் த டேயிலும் இடம்பிடிச்சிருக்கு. இதுவரைக்கும் ட்ரெய்லரையே 32 லட்சம் பேர் பாத்திருக்காங்க. 

இதோட சேர்த்து ட்ரம்ப் தன்னோட வரி குறித்து லைவ் பண்ணிருக்காரு, விராட் கோலிக்கு தோள்பட்டைல காயம், தமிழ்நாட்டுல பட்ஜெட் தாக்கல் பண்றதுக்கு முன்னாடி பட்ஜெட்ட ஜெயலலிதா சமாதில வைச்சு ஆசிர்வாதம் வாங்கிய ஜெயக்குமார், அப்பறம் இந்த கட்டுரைய நீங்க படிச்சுட்டு இருக்கீங்கனு தெறி வைரலா போச்சு பாஸ் இன்றைய நாள். 

- ட்ரெண்ட்பெர்க்
 Trending Articles

Sponsored