சைக்கிள் ஓட்டி ஆடு வரைந்த ஆஸ்திரேலியர்... இது ஜி.பி.எஸ் ஆர்ட்..! #GPSdoodlesSponsoredஓவியர்களை அடக்கவே முடியாது. வீட்டு சுவரில் தொடங்கி எது கிடைத்தாலும் அதில் கிறுக்கி வைத்துவிடுவார்கள். டெக்னாலஜி வளர வளர இவர்கள் வரையும் தளங்கள் அதிகரித்துக் கொண்டே போனது. அதன் உச்சமாக ஒன்றை ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதுதான் GPS art.

ஜி.பி.எஸ் தெரியும். அது என்ன ஜி.பி.எஸ் ஆர்ட் என்கிறீர்களா? 

Sponsored


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜென்போன்ஸ் ஒரு சைக்கிளிஸ்ட். தினமும் பல கிலோ மீட்டர்கள் சைக்கிள் ஓட்டுபவர். அவருக்கும் ஒரு விபரீத ஆசை தோன்ற, உடனடியாக அதை செயல்படுத்த களம் இறங்கி விட்டார். வழக்கம் போல் மேப்பை வைத்து ரூட் போட்டிருக்கிறார். அதில் ஆடு போன்ற உருவம் வரும்படி தனது சைக்கிளிங் ரூட்டை வடிவமைத்திருக்கிறார். பின், அந்த ரூட்டை ஃபாலோ செய்து சைக்கிளின் சென்றிருக்கிறார்.

Sponsored


நடைபயிற்சி மேற்கொள்கிறவர்கள், ரன்னர்ஸ் மற்றும் சைக்கிளிஸ்ட் ஆகியோர் தங்களது பாதையை டிராக் செய்ய ஸ்ட்ராவா(Strava) என்னும் ஆப் பயன்படுத்துகிறார்கள். அதில் தான் தனது சைக்கிள் பயணத்தையும் பதிவு செய்திருக்கிறார் ஜென்போன்ஸ். அதில் அவர் சென்ற பாதையை பார்த்தால், ஆடு போன்றே இருக்கிறது.

மொத்தம் 202 கிமீ. 7 மணி நேரத்தில் இதை கடந்திருக்கிறார். இடையில் ஒரு மணி நேரம் டீ, காபி குடிக்க இடைவேளை. தனது பயண மேப்பை ரெடிட் தளத்தில் ஜென்போன்ஸ் ஷேர் செய்திருக்கிறார். அதைப் பார்த்த மற்ற யூஸர்ஸ் “ஏன் சாமி ஆடு உருவத்தை தேர்ந்தெடுத்தீங்க” எனக் கேட்க, அதற்கு ஜென்போன்ஸ் “அதாங்க ஈஸி...” என பதில் சொல்லியிருக்கிறார். இன்னும் சில நாட்களில் ஜென்போன்ஸும், அவரது மனைவியும் பெற்றோர் ஆக போகிறார்கள். சைக்கிளிங் அவர்கள் உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ல உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார். சைக்கிளிங், நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவை பொதுவாகவே போரடிக்கும் விஷயங்கள் தான். அதை மேலும் சுவாரஸ்யப்படுத்திக் கொள்வதற்காக இந்த மாதிரி விஷயங்கள் உதவும் என்கிறார்கள்.

”ஜி.பி.எஸ். ஆர்ட் ஆச்சர்யமாக இருக்கே” என கூகுள் செய்தால், இது ஏற்கெனவே ஹிட் அடித்த விஷயம் தான். போக்கிமான் கோ விளையாட்டை போல இதை தீவிரமாக செய்து வரும் ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் பிரேஸிலில் நடந்த போது அந்த நாட்டின் உருவம் வருவது போல ஒரு ரூட் பிடித்திருக்கிறார்கள். தங்களுக்கு பிடித்தமானவர்கள் பிறந்த நாள் வந்தால் அவர்களை வாழ்த்தும் வாசகத்துடன், கேக் உருவமும் வரும்படி ரூட் போட்டு மெர்சல் காட்டியிருக்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள். உங்கள் கேர்ள் ஃப்ரெண்டின் 21வது பிறந்த நாளுக்கு அந்த எண் வரும்படி சென்னையை பைக்கில் அவருடன் ஒரு ரவுண்ட் அடித்து, அந்த ரைடை ட்ராக் செய்து அவரிடம் காட்டினால் எப்படி இருக்கும்?

 ஜி.பி.எஸ் ஆர்ட் கேலரியை காண இங்கே க்ளிக் செய்யுங்கள்

-கார்க்கிபவாTrending Articles

Sponsored