வீட்டுக்குள் வந்து வியாபாரம் செய்கிறது கூகுள்... கடுப்பான வாடிக்கையாளர்..!Sponsoredவிளம்பரம்ங்கறது டிவில வந்து பாத்திருப்பீங்க, பேப்பர்ல வந்து பாத்திருப்பீங்க ஏன் வலுக்கட்டாயமா கால் பண்ணி கூட பாத்திருப்பீங்க. உங்க வீட்டுல உள்ள உங்களோட பர்சனல் வாய்ஸ் அசிஸ்டென்ட்ல டிவைஸ்ல வந்து பாத்திருக்கீங்களா? அப்படினு பொங்கி எழுந்திருக்காரு ஒரு கூகுள் ஹோம் வாடிக்கையாளர். 

கூகுளோட பர்சனல் வாய்ஸ் அசிஸ்டென்ட் தான் கூகுள் ஹோம். இதில் வந்த திடீர் விளம்பரம் போன்ற  ஆடியோவை கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறார் வாடிக்கையாளர் ஒருவர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்று காலையில் இன்றைய நாள் குறித்து கூகுள் ஹோமிடம் கேட்க கூகுள் ஹோமும் இன்றய நாளின் வெப்பநிலை, நேரம், அவர் பணிக்குச் செல்ல எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கூறியுள்ளது. அதன் பின் வந்துள்ள ஆடியோ தான் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

Sponsored


அந்த ஆடியோவில் இன்றைய தலைப்புச் செய்திகள் என்றும், டிஸ்னியின் லைவ் ஆக்‌ஷன் பியூட்டி அண்ட் பீஸ்ட் இன்று துவங்கவுள்ளது என்ற விஷயத்தையும் கூறுகிறது. இதனை கூகுள் விளம்பரம் இல்லை என்று மறுத்தாலும், இது கூகுளின் பார்ட்னர்களுடனான சிறிய ப்ரமோஷன் என கூறுவது இதனை விளம்பரமாகவே காட்டுவதாக கூறுகின்றனர்.

Sponsored


கூகுள் விளம்பரங்கள் மூலம் நல்ல வருவாய் ஈட்டுகிறது. அதே உத்தியைத் தான் கூகுள் ஹோமிலும் தொடருகிறது என்று கூறப்படுகிறது. ஆனாலும் கூகுள் இதுகுறித்த தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. இதனால் கூகுள் ஹோம் வாடிக்கையாளரை கடுப்பேற்றுவதாக அந்த வாடிக்கையாளர் ட்விட்டரில் கூறியுள்ளார். 

ஏற்கெனவே டேட்டாக்கள் மூலம் நமது இ-மெயில் கணக்குகளில் விளம்பரம் காட்டும் கூகுள், தற்போது பர்சனல் அசிஸ்டென்ட் வரை வந்துவிட்டது. கூகுள் எல்லா விஷயங்களிலும் விளம்பரத்தைப் புகுத்துகிறது. பின்பு விளம்பரமில்லா சேவைக்கு என தனிக்கட்டணம் வசூலிக்கிறது என்ற விஷயமும் இணையவாசிகளிடம் பரவியுள்ளது.


கூகுள் ஹோம் எப்படிச் செயல்படுகிறது?

 உங்கள் வீட்டில் எந்த இடத்தில் இருந்தும், என்ன கேட்டாலும் தேடிப்பிடித்து பதில் சொல்லிவிடும் கூகுள் ஹோம். எப்படி செயல்படுகிறது தெரியுமா?

கூகுள் ஹோமில் மூன்று முக்கிய விஷயங்கள் உண்டு. ஒன்று, ப்ளூடூத் அல்லது வைஃபை மூலம் கனெக்ட் செய்யப்பட்ட ஒரு ஸ்பீக்கர். இரண்டு, உங்கள் குரலை மிக நுண்ணியமாக கண்டறிய கூடிய மைக்குகள். இவை உங்கள் வீட்டின் எல்லா அறைகளிலும் ஒன்று பொருத்திவிட வேண்டும். மூன்று, இதன் ஆர்ட்டிஃபிஷியல் இன்டிலெஜன்ஸ் புராஸசர். நீங்கள் சொல்வதை மைக் மூலம் கேட்டு, தேவையான தகவலை இணையம் மூலம் புராஸசர் தேடி, பதிலை ஸ்பீக்கர் மூலம் உங்களுக்குச் சொல்லும். தீர்ந்தது விஷயம்.

ஆப்பிள் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிரி’யின் விஸ்வரூப வெர்ஷன்தான் கூகுள் ஹோம் எனச் சொல்லலாம். அது மொபைல் அளவில் செய்வதை இது வீடு முழுக்கச் செய்கிறது. ஆப்பிளின் சேவைக்கு ’சிரி’ என பெயர். அமேஸானின் புராடக்டை “அலெக்ஸா” என அழைத்தார்கள். மிஷின் என்றாலும் நாம் கேட்பவைகளுக்கு பதில் சொல்வதால், அதையும் சக மனிதனாகவே நாம் உணர்வோம். அதனால் அதற்கு சிரி, அலெக்ஸா போன்ற பெயர்கள் ஒரு நெருக்கத்தை கொடுக்கும். “சிரி... இப்ப என்ன படம் சத்யம்ல ஓடுது”, “அலெக்ஸா... பெங்களூருக்கு அடுத்த ஃப்ளைட் எப்போ” எனக் கேட்கும்போது அவையும் நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல நினைப்போம். கூகுள் அப்படி ஒரு பெயரை இன்னும் சூட்டவில்லை. இதை ஒரு முக்கியமான குறையாக நினைக்கிறார்கள் டெக்கி விமர்சகர்கள். 

இந்த மேஜிக் எல்லாமே ஆங்கிலத்தில் மட்டுமே செல்லுபடியாகும். ’தமிழுக்கு இப்ப வராதா’ என்ற கேள்விக்கு கபாலியைப் போல கையை பிசைகிறார்கள் கூகுள் ஃபேன்ஸ். அப்படியே வந்தாலும் சென்னைத்தமிழ், கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ் என பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். அது நடக்கும்வரை “ஹே கூகுள்... வில் இட் ரைன் டுடே” தான். 

- ச.ஸ்ரீராம்Trending Articles

Sponsored