திருமணத்துக்கு ஹெலிகாப்டர் புக் செய்ய எவ்வளவு தேவை தெரியுமா?தமிழ் இணையச் சமூகம் சீசனுக்கு ஒரு வார்த்தையை பிடித்துக் கொள்ளும். அதை வைத்தே மீம்ஸ், ட்வீட்ஸ், ஸ்டேட்டஸ் தொடங்கி சகலவிதமான சேவைகளையும் நெட்டிசன்ஸ் வழங்குவார்கள். பல சமயம் பிரபலங்கள் மாட்டிக்கொள்வார்கள். எப்போதாவதுதான் முகமறியா ஆட்கள் சிக்குவார்கள். யார் கிடைத்தாலும் நெட்டில் ஒரே ட்ரீட்மெண்ட்தான். அப்படி இந்த வாரம் சிக்கியிருக்கும் சொல் “ஹெலிகாப்டர்”.

Sponsored


என் திருமணத்துக்கு மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வர வேண்டும்” எனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஒரு பெண் சொல்ல, பற்றிக்கொண்டது இன்டர்நெட். ஹெலிகாப்டரை வைத்து பதிவேற்றப்பட்ட விஷயங்களின் நல்லவை  கெட்டவைகளை சமூக வலைதளம் முழுக்கவே விவாதித்து வருகிறார்கள். ஹெலிகாப்டர் என்ன அவ்வளவு பெரிய செலவு வைக்கும் விஷயமா என களத்தில் இறங்கி விசாரித்தோம்.

Sponsored


இணையத்திலே ஏகப்பட்ட ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கும் நிறுவனங்களை பிடிக்க முடிகிறது. மேலே இருந்து பூக்கள் தூவதில் தொடங்கி, திருமணத்துக்கு மாப்பிள்ளையை அழைத்து வருவது வரை பலவித சேவைகளை வழங்கி வருகிறார்கள். சரி, எவ்வளவு செலவாகும்?

Sponsored


இரண்டு லட்சத்தில் இருந்தே ஹெலிகாப்டர்கள் கிடைக்கின்றன. இந்த இரண்டு லட்சம் என்பது 2 மணி நேரம் பறக்கவும், லேண்ட் ஆகும் இடத்துக்கான வாடகையும் சேர்த்து. இவை இல்லாமல், வெயிட்டிங் டைம், இரவு தங்க நேர்ந்தால் அந்த சார்ஜ் என எக்ஸ்ட்ரா லிஸ்ட் நீள்....கிறது.

ஒரு மணி நேரம் காத்திருக்க கூடுதலாக 5000 ஆகும். இரவு ஹால்ட் என்றால் 15000 முதல் 25000 ஆகும், ஹெலிகாப்டரின் சைஸுக்கு ஏற்ற அளவு. 

புக்கிங் செய்யும் போதே 50% கட்டணம் கட்டிவிட வேண்டும். திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்பு மீதித்தொகையை கட்டிவிட வேண்டும்.

ஏர்போர்ட், ஹெலிபேட் இல்லாத இடம் என்றால் உள்ளூர் அனுமதிகளை எல்லாம் மாப்பிள்ளை(அல்லது பெண் வீட்டார்) தரப்பில்தான் வாங்க வேண்டும்.

ஹெலிகாப்டருக்கு டோல் கிடையாது என்பது சின்ன ஆறுதல். ஆனால், வேறு என்ன விதமான செலவு வந்தாலும் புக்கிங் செய்பவர்கள் தான் பொறுப்பு. ஹெலிகாப்டர் கம்பெனி காலி பாக்கெட்டுடன் தான் பைலைட்டை அனுப்பும்.

R44 ரக ஹெலிகாப்டர்களைதான் திருமணம் போன்ற பிரைவேட் விசேஷங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இதில் 10கிலோ அளவிலான பேக்கேஜுகளைதான் அனுமதிக்கிறார்கள். மாப்பிள்ளை வேறு ஏதாவது சர்ப்ரைஸாக எடுத்து வருவதாக இருந்தால் முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது. அல்லது, “உங்க காஸ்ட்யூம் வெயிட் அதிகம்” என அதையும் கழட்ட சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஹெலிகாப்டர் பாய்ஸ் ஸ்ட்ரிக்ட்.

மாப்பிள்ளை குதிரையில் வந்தால் போதும். எங்களுக்கு அவர் மேல் பூக்களை மட்டும் கொட்ட வேண்டும் என்றால், அதற்கு கொஞ்சம் பணம் குறைத்துக் கொள்வார்கள். 30-40 கிலோ பூக்களை கொட்டுவார்கள். அதுவும் ரோஜாப்பூ இதழ்களை மட்டுமே அனுமதிப்போம் என சில ஹெலிகாப்டர் சேவை இணையதளங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். யாரோ ஒரு மாமனார் காலிபிளவரை கொட்டச் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.

”காசு தந்துவிட்டோம்.. வந்துவிடுப்பா” என்பதெல்லாம் ஹெலிகாப்டர் விஷயத்தில் ஒத்து வராது. மணப்பெண் நிறைய அரிசி சாப்பிட்டு திருமண நாள் அன்று மழை வந்தால், ஹெலிகாப்டருக்கு லீவுதான். டி.ஆர்.எஸ் முறையில் கூட அவர்களை வரவைக்க முடியாது.

எக்ஸ்ட்ரா செலவுகளை கூட்டி, சர்வீஸ் டேக்ஸையெல்லாம் கூட்டினால் மூன்று லட்சங்கள் தேவைப்படலாம். ஓ.கே தானே பாஸ்?

-கார்க்கிபவாTrending Articles

Sponsored