பூமி சூடாகாம இருக்க ஒரு மணி நேரம் லைட் ஆஃப் பண்ணுங்க ப்ளீஸ்



ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் ஒரு தேதியை தேர்ந்தெடுத்து அதில் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை விளக்குகளை அணைத்து வைத்து அந்த ஒரு மணி நேரத்தை எர்த் ஹவர் என்ற பெயரில் கொண்டாடி வருகிறது  World Wide Fund for Nature (WWF). இதன் படி உலகின் முக்கிய கட்டடங்கள், சின்னங்கள் ஆகியவை விளக்குகள் அணைக்கப்பட்டு பூமி இருட்டாக காட்சியளிக்கப்படும். இதனை தனிமனிதர்களும் வருடந்தோறும் சீரியஸாக பின்பற்றுகிறார்கள். இந்த ஒரு மணி நேரத்தை தான் எர்த் ஹவர் என்று குறிப்பிடுகிறார்கள். 

Sponsored


புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் என பல்வேறு விஷயங்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்த இந்த செயலை செய்து வருகிறார்கள். புவியின் துருவப்பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை, கடல் நீர் மட்டத்தின் அளவு அதிகரிப்பது போன்ற செயல்களும், பருவநிலைகள் மாறி மாறி அமைவதும் மனித உயிரினத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதற்காக இன்று மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் 178 நாடுகளில் 400க்கும் அதிகமான முக்கிய இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருக்கும். 

Sponsored


Sponsored


சென்ற வருடம் நிகழ்த்தப்பட்ட எர்த் ஹவர் நிகழ்வில் மட்டும் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 30000 பேர் சமூக வலைதளங்களில் எர்த ஹவரை ஆதரிக்கும் வகையில் தங்களது புரோஃபைல் புகைப்படங்களை மாற்றியுள்ளனர். எர்த ஹவர் ஹேஷ்டேக்கை 2.5 பில்லியன் முறை மக்கள் பகிர்ந்துள்ளனர். 18.7  மில்லியன் மக்கள் ஃபேஸ்புக்கில் பதிவுகள் மூலம் எர்த் ஹவருக்கு ஆதரவளித்துள்ளனர்.

பிக் பென் லண்டன்,ஈஃபில் டவர் , ஃபிரான்ஸ்,கதெட்ரல் , ஜெர்மனி,தைபி 101 கட்டிடம் , தைவான்,சிட்னி ஒபேரா : ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் வண்ண விளக்குகளால் ஒளிர்வது நிறுத்தப்பட்டு இருளில் காட்சியளிக்கும். இதனால் மக்களிடம் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்பு உணர்வு அதிகரிப்பதாக கூறப்படுகிறது, இவர்களின் இலக்கு 2050ம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதலை கணிசமான அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான்.

உங்கள் தலைமுறையும், அடுத்த தலைமுறையும் இன்னும் நிறைய நாட்கள் உலகில் எந்த அசெளகரியமும் இன்றி இயற்கையை துன்புறுத்தாமல், சீற்றங்களால் பாதிக்கப்படாமல் வாழ மரம் நடுவது, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்பு உணர்வோடு செயல்படுவது என அனைத்து காரியங்களை மேற்கொள்ள WWF சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது கடந்த 10 வருடங்களில் பல செயல்களையும், திட்டங்களையும் செய்து முடித்துள்ளது. 2015ம் ஆண்டு உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட அதிக மக்கள் கலந்து கொண்டு இந்த கருத்தை வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

எர்த் ஹவரின் அதிகாரப்பூர்வ தளமான www.earthhour.org என்ற இணையதளத்தில் லாக் இன் செய்து உங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் 5 பதிவுகளை எர்த ஹவருக்காக செய்யுங்கள் அது பல கோடி பேரை சென்றடையும் என்கிறது WWF. மேலும் உங்களால் முடிந்த தொகையை உலக வெப்பமயமாதை தடுக்கும் முயற்சிகளுக்கு நன்கொடையாகவும் இந்த இணையதளம் மூலம் அளிக்கலாம். இவையெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் இரவு 8:30 மணி முதல் 9:30 வரை விளக்குகளை உங்கள் வீட்டில் அணைத்து வைத்து இந்த விஷயத்தை ஆதரியுங்கள். 

-ச.ஸ்ரீராம்



Trending Articles

Sponsored