வாட்ஸ்அப்... குடும்பத்தில் சண்டை மூட்டுகிறதா.. .சமாதானம் செய்கிறதா? #VikatanSurveyResultsவழக்கமாக  “இந்த சர்வே”க்கு வாக்களியுங்கள் என்று வாட்ஸ்அப்பில் தான் செய்தி வரும். நாம் வாட்ஸ்அப் பற்றியே ஒரு சர்வே நடத்தினோம். பிடித்த ஒரு விஷயம் என்றவுடன் ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஆர்வத்துடன் இந்த சர்வேயில் கலந்துகொண்டார்கள். அதை விட ஆச்சர்யம், சர்வே முடிவுகள்.

Sponsored


20 வயதுக்கும் குறைவானவர்களில் மிகச்சிலரே வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள்.  இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்கள் எல்லோருமே 20 வயதுக்கு அதிகமானவர்களாக இருக்கும் வாய்ப்பு இருந்தாலும், இந்த எண்ணிக்கை ஆச்சர்யமாக இருக்கிறது.

Sponsored


Sponsored


எதிர்பார்த்தது போலவே தனி மெஸெஜ் சேவைக்கு தான் அதிக வாக்குகள் விழுந்தன. வாட்ஸ்அப்பின் வாய்ஸ் கால் சேவை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.


யாருக்காக வாட்ஸ் அப் என்ற கேள்விக்கும் சுவாரஸ்யமான முடிவையே தந்திருக்கிறார்கள். நண்பர்கள் பெரும்பான்மை என்றாலும், அடுத்த இடத்தில் குடும்பம் இருக்கிறது. காதலிப்பவர்கள் வாட்ஸ்அப் சேவையை மிக குறைவாகவே பயன்படுத்துகிறார்கள்.


பாதுகாப்பு விஷயத்தில் நிறைய பேர் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என சொல்லியிருந்தாலும் 31% பேர் “அது பற்றியெல்லாம் கவலையில்லை” என சொல்லியிருப்பது அதிர்ச்சி. டிஜிட்டல் உலகின் ஆபத்துகளை நாம் இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.


வாட்ஸ் அப்பை தேவைப்படும்போது பயன்படுத்துவேன் என்பவர்களே அதிகம். இது ஒரு நல்ல விஷயம். வேறு வழியில்லாமல் இருக்கிறேன் என 15% பேர் சொல்லியிருக்கிறார்கள். இதுதான் புரியவில்லை. :)


அமெரிக்காவில் பதிவாகும் விவாகரத்து வழக்குகளில் மூன்றில் ஒன்றில் ஃபேஸ்புக்குக்கு பங்கிருக்கிறது என்கிறார்கள். நம்ம ஊரில் வாட்ஸ் அப்பால் எந்த சண்டையும் வந்ததில்லை என அதிகப்படியான பேர் சொல்லியிருப்பது ஆறுதல்.

வாட்ஸ் அப்புக்கு அடுத்தப்படியாக அதிகமானோர் பயன்படுத்தும் சாட் அப்ளிகேஷன் ஹைக் மற்றும் வைபர்தான்.

-கார்க்கிபவா


 Trending Articles

Sponsored