2G... 3G... 4G... மொபைல் பேட்டரியை அதிகம் தீர்ப்பது எது? ஏன்? #How4Gworks



மொபைல் போன்கள் ஸ்மார்ட்போனாக மாறியதில் இருந்து தொடங்கிய பிரச்னை பேட்டரி சார்ஜ். மூன்று நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்ய சொன்னது நோக்கியா மொபைல். அதன் பின் வந்த சீனா, கொரியா மொபைலகள் ஒரு வாரம் முதல் சில மாடல்கள் ஒரு மாதம் வரை சார்ஜ் நின்றன. ஆனால், அதன் பின் வந்த ஆப்பிளும், ஆண்ட்ராய்டும் தினமும் இரண்டு, மூன்று முறை பவர் சாக்கெட்டை நோக்கி ஓட வைத்தன. பவர் பேங்க் கலாசாரத்தையும் உருவாக்கின. இப்போது 4ஜி, Volte வரை வந்துவிட்ட டெக்னாலஜியால், இன்னமும் வேகமாக பேட்டரி சார்ஜ் தீர்கின்றன. ஒவ்வொரு புதுப்புது டெக்னாலஜி வர வர, சார்ஜ் வேகமாக தீர்கிறது என்பதுதான் உண்மை. அட்வான்ஸ்டு என்றால், எல்லா விதத்திலும் முன்பிருந்த எக்ஸ்பீரியன்ஸை இன்னும் மெருகேற்றத்தானே வேண்டும்? ஏன் பேட்டரி பவரில் மட்டும் இந்த சிக்கல் என்ற கேள்வி நியாயமானது. உண்மையில் 4ஜி, 3ஜி, 2ஜி டெக்னாலஜிகளில் எது அதிக பவர் எடுக்கின்றன?

Sponsored


இதற்கு ஒற்றை சொல்லில் பதில் சொல்வது சிரமம். இன்னும் சில காரணங்களையும் கவனிக்க வேண்டும். 

Sponsored


காட்டுக்குள்ளேயும் எங்க நெட்வொர்க் எடுக்கும் என விளம்பரப்படுத்தினாலும், இன்னமும் நம் டெலிகாம் நிறுவனங்களின் டவர்கள் “வீக்” தான். மாநகர எல்லைக்குள்ளேயே பல இடங்களில் சிக்னலுக்கு முக்குவதை பார்க்கலாம். டவரில் இருந்து மொபைல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, அவ்வளவு அதிக சக்தியை மொபைல் எடுத்துக் கொள்ளும். போலவே, தொடர்ந்து சிக்னலை மொபைல் தேடிக்கொண்டேயிருந்தால், அதிக பேட்டரியை அது சாப்பிடும்.

Sponsored


இந்தியாவில் எல்லா ஏரியாக்களிலும் 5க்கும் மேற்பட்ட முன்னணி நெட்வொர்க்குகள் உண்டு. நிறைய நெட்வொர்க்குகள் இருந்தால் தனது நெட்வொர்க்கை மொபைல் தேடிக் கொண்டேயிருக்கும். அதற்கும் பேட்டரி பவர் அதிகமாக செலவாகும்.

4ஜி டெக்னாலஜி ரொம்ப சிக்கலான அல்காரிதமைக் கொண்டது. நிறைய டேட்டாவை சுருக்கி கடத்துகிறது. இதனை பிரித்தறியும் வேலையை மொபைல் போன் தான் செய்கிறது. எனவே, இதற்கு ஆகும் பேட்டரி பவர் அதிகம் தான். 

நேரத்தின் அடிப்படையில் 2ஜியை விட 3ஜிக்கும், 3ஜியை விட 4ஜிக்கும் அதிக சக்தி தேவை. ஆனால், ஒரு கிலோ பைட் டேட்டாவை டெளன்லோடு செய்ய கணக்கிட்டால், 4ஜிக்கு 3ஜியை விட குறைவான சக்தியே தேவை. போலவே 3ஜியை விட 2ஜிக்கு இன்னும் குறைவு. 

ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம்.

100 எம்பி ஃபைலை டெளன்லோடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். 4ஜியில் இதற்கு ஆகும் நேரம் 2 நிமிடங்கள் என்றால், 3ஜியில் 3 நிமிடங்கள். 2ஜியில் 10 நிமிடங்கள் கூட ஆகலாம். 2 நிமிடங்கள் 4ஜி டேட்டாவை கம்யூனிகேட் செய்ய தேவைப்படும் பவர், 3நிமிடங்கள் 3ஜி டேட்டாவை கம்யூனிகேட் செய்ய தேவைப்படுவதை விட குறைவானதுதான். இந்த கணக்குப்படி, 100 எம்பி பைலை டெளன்லோடு செய்தால், 4ஜி குறைவான சக்தியில் அந்த வேலையை முடித்துவிடும். ஆனால், 3 நிமிடங்கள் 4ஜியை பயன்படுத்தினால் அது 3ஜிக்கு ஆகும் சக்தியை விட அதிகமாகத்தான் எடுத்துக் கொள்ளும்.

இந்த டெக்னாலஜி சமாச்சாரங்களை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு பார்த்தால், 4ஜி பயன்படுத்திக் கொண்டேயிருந்தால் நிச்சயம் பேட்டரி சீக்கிரம் சிவப்பு நிறத்துக்கு வந்துவிடும். உங்கள் மொபைலில் 4ஜி, 3ஜி இரண்டும் இருந்தால், மாற்றி மாற்றி பயன்படுத்தவும். சீக்கிரம் வேலை முடிய வேண்டும் என்றால் 4ஜியை பயன்படுத்தலாம். இல்லையேல் 3ஜியே பேட்டரிக்கு நண்பன்.

ஜியோவில் இதற்கு மாற்றேயில்லை. ஜியோ சிம் 4ஜியில் மட்டுமே வேலை செய்யும்.

நீங்கள் என்ன மொபைல்/நெட்வொர்க் பயன்படுத்துகிறீர்கள்? உங்கள் பேட்டரி லைஃப் எப்படி இருக்கிறது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

-கார்க்கிபவா



Trending Articles

Sponsored