ஒரு பொருள்... நான்கு பெயர்கள்... இது மார்க் சக்கர்பெர்க் மார்க்கெட்டிங்!



ஒரே பொருளை தயாரித்து அதன் வெவ்வேறு வடிவங்களை வேறு வேறு பெயரில் பல இடத்தில் விற்பது ஒரு மிகப்பெரிய வியாபார உத்தி. இதனை சட்டத்துக்கு எதிராக செய்தால் சற்று தவறான செயலும் கூட. ஆனால் இதனை சட்டப்பூர்வமாக மிக தைரியமான உத்தியாக கையாண்டுள்ளது ஃபேஸ்புக். ஒரே ஒரு விஷயத்தை டெவலப் செய்து அதன் அனைத்து பிராண்டுகளுக்கும் வெவ்வேறு பெயரில் அறிமுகம் செய்து பயனர்களின் கவனத்தை அதிகரித்துள்ளது ஃபேஸ்புக். இது தான் மார்க் சக்கர்பெர்க் மார்க்கெட்டிங்!

Sponsored


ஃபேஸ்புக் ஸ்டோரி:

Sponsored


இது நாள் வரையில் வெறும் ஸ்டேட்டஸ், போட்டோ, வீடியோ என மட்டுமே இருந்த ஃபேஸ்புக் இன்று பல விஷயங்களுடன் இன்னும்  பிரமாண்டமாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்யும் இடத்துக்கு மேல் ஒரு புதிய வரிசையை பார்த்திருப்பீர்கள். அதில் பேப்பர் ராக்கெட் போன்ற ஒரு போஸ்ட் ஐகான் இருந்திருக்கும். இதனை ’ஃபேஸ்புக் ஸ்டோரி’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதில் நீங்கள் விரும்பும் புகைப்படம், வீடியோ, ஜிஃப் போன்றவற்றை 24 மணி நேரம் உங்கள் நண்பர்கள் பார்க்குமாறு ஒரு ஸ்டோரியாக பதிவிடலாம். 24 மணி நேரம் கழித்து அது அழிந்துவிடும். இதனை சமீபத்தில் தான் தனது ஆப்-ல் அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

Sponsored


மெஸஞ்சர் மை டே:

ஃபேஸ்புக்கின் தகவல் பரிமாற்றம் மற்றும் தனி நபர் சாட் ஆப்பான மெஸஞ்சரில் ஒருவர் ’மை டே’ என்ற வசதி மூலம் அவர் விரும்பும் புகைப்படம், வீடியோ, ஜிஃப் போன்றவற்றை 24 மணி நேரம் உங்கள் நண்பர்கள் பார்க்குமாறு வைக்கலாம். அதற்கு நண்பர்களும் டெம்ப்ளேட் ரிப்ளைகளை தட்ட முடியும் என்ற வசதியை வழங்கியுள்ளது ஃபேஸ்புக். இதனை மொத்தமாக அனைத்து நண்பர்களுக்கு அல்லது  தனியாக குறிபிட்ட நண்பருக்கும் அனுப்ப  முடியும்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்:

ஃபேஸ்புக் ஸ்டோரிஸ் இந்த விஷயத்தை பார்த்து தான் காப்பி அடிக்கப்பட்டதாக பலர் கூறுகிறார்கள். ஆனால் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த வசதியே ஸ்னாப்சாட்டிலிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்று என்பது இன்ஸ்டாபதிவர்களின் கருத்து. இதிலும் அதே விஷயம் தான் ஃபேஸ்புக்கின் மற்ற ஆப்களிலும் உள்ளதை போலவே இதிலும் 24 மணி நேரத்தில் மறையும் ஸ்டோரிக்கள் பதிவிடப்படுகின்றன. இது போட்டோக்களுக்கான தளம் என்பதால் செல்ஃபிக்களும், புகைப்படங்களும் மற்ற ஆப்களை விட இதில் அதிகமாக இடம்பெறுகின்றன. 

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்:

I am available, Battery about to die, No talk whatsapp only என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தவர்களை திடீரென வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் புகைப்படம் என்றதும் எப்படி ஸ்டேட்டஸ் போடுவது என குழம்பி தவித்தனர். அதுவும் ஃபேஸ்புக் ஸ்டோரியை போன்றது தான். பின்னர் அது சரியான உத்தியல்ல என்பதை உணர்ந்து வாட்ஸ் அப் பழைய ஸ்டேட்டஸ் வசதியும் அறிமுகம் செய்யப்படும் என்ற பின்வாங்கியது. இருந்தாலும் இந்த  ஸ்டேட்டஸ் தற்போது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

சரியாக சொல்லப்போனால் இவை நான்குமே ஒரே தயாரிப்பு தான். அமைப்புகள், பகிர்தல் உள்ளிட்ட அனைத்துமே ஒரே மாதிரியாக தான் உள்ளன. இதனை ஃபேஸ்புக்கின் நிறுவனங்களான மெஸன்ஜர் , இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய எல்லாவற்றிலும் கொண்டு வந்துவிட்டது ஃபேஸ்புக். 

ஃபேஸ்புக் தந்திரமாக உத்திகளை கையாளும் நிறுவனம் தான் என்றாலும் இப்படி ஒரே தயாரிப்பை எல்லா பிராண்டுகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்வது இந்த அனைத்து தளங்களிலும் இயங்கும் பயன்பாட்டாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அதிக நேரம் ஆப்களில் செலவழிக்கவும், தினசரி வருகைக்கும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ள ஃபேஸ்புக். இன்னும் பல திட்டங்களோடு விரைவில் ஒருவரின் டைம்லைனை ஆக்கிரமிக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை.

- ச.ஶ்ரீராம்


 



Trending Articles

Sponsored