ப்ரைம் வாடிக்கையாளர்களே... முடிவுக்கு வருகிறது ஜியோ சம்மர் சர்ப்ரைஸ்..! #JioSponsoredட்ராய் உத்தரவை ஏற்று சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை திரும்பப் பெறப்போவதாக அறிவித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஜியோ. கடந்த வருடம் முதலே சலுகை மேல் சலுகையாக அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களை சம்பாதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி முதல் அனைத்து இலவச சேவைகளும் முடிவுக்கு வருவதாக அறிவித்தது. அதன்படி, ஜியோ சேவைகளைத் தொடர வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. மேலும் ஜியோ ப்ரைம் உறுப்பினர்கள், ப்ரைம் அல்லாதவர்கள் என இரு பிரிவுகளாக கட்டணங்களும், அதற்கேற்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. மார்ச் 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகைகளும் இருந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் பலரும் ஜியோ ப்ரைமில் உறுப்பினர்கள் ஆனார்கள். ஆனால் அதன்பின்னர் ஜியோ நிறுவனம், மார்ச் 31-ம் தேதிக்குள் ப்ரைம் திட்டத்தில் சேர வேண்டும் என்ற காலஅவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்தது. அது மட்டுமின்றி, ஏற்கெனவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்த ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச டேட்டா சலுகைகளையும் அறிவித்தது. மேலும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ப்ரைம் வாடிக்கையாளர்களாக மாறி, ரீசார்ஜ் செய்பவர்களுக்கும் இந்த 'சம்மர் சர்ப்ரைஸ்' ஆஃபர் பொருந்தும் என அறிவித்தது. இதன்படி ரூ. 303-க்கு ரீசார்ஜ் செய்பவருக்கு, ஒருநாளைக்கு ஒரு ஜி.பி அளவுக்கு 4G டேட்டா மற்றும் மற்ற ஜியோ சேவைகள் இலவசமாக வழங்கப்படும். 

Sponsored


இதைத் தொடர்ந்து பலரும் ஜியோ ப்ரைம் திட்டத்திற்கு கட்டணம் செலுத்தி வந்த நிலையில், நேற்று திடீரென ஒரு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

Sponsored


அதில், "ஜியோ கடந்த மார்ச் 31-ம் தேதி சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை அறிவித்தது. இதன்படி ரூ.303 அல்லது அதற்கு மேலாக ரீசார்ஜ் செய்யும் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, மேலும் மூன்று மாதங்கள் இலவச இன்டர்நெட் சேவையைத் தொடரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், இந்த சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 

இதைத்தொடர்ந்து அடுத்த சில நாட்களில் இந்த ஆஃபரை நிறுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது.  அதே சமயம், ஏற்கெனவே இந்த ஆபரில் இணைந்தவர்கள், தடையின்றி தொடரலாம்" என அறிவித்துள்ளது. 

எழும் சந்தேகங்களும், பதில்களும்!

இதுவரை ரூ.303 மற்றும் அதற்கு மேலாக ரீசார்ஜ் செய்தவர்களுக்கு, இந்த ஆஃபர் கிடைக்குமா என்பதற்கு ஜியோ தெளிவாகப் பதில் கூறியிருக்கிறது. ஏற்கெனவே அறிவித்தபடி, வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச கால் சேவை, 1ஜிபி இணைய சேவை வழங்கப்படும்.

அதேசமயம் ப்ரைம் உறுப்பினராக மட்டும் இருந்துகொண்டு, இனிமேல் ரூ.303 கட்டணம் செலுத்துபவர்களுக்கு இந்த ஆஃபர் பொருந்தாது.ஆனால், சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபருக்கான கடைசி நாள் இன்னும் அறிவிக்கப்படாததால், ஜியோ அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை, அந்த பேக் ரீசார்ஜ் செய்ய முடியும் என்றே சொல்லப்படுகிறது.

அதே சமயம்,  இதற்கு பதிலாக ஜியோ கூடிய விரைவில் வேறு மாற்று சலுகைகள் ஏதேனும் அறிவிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.  ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டண விவரங்கள் மற்றும் டேட்டா பேக்குகள் மட்டுமே உங்களுக்கு பொருந்தும். இன்னும் ப்ரைம் வாடிக்கையாளர்களாக மாறாதவர்களுக்கும் இதேதான். 

மற்ற நிறுவனங்களின் டேட்டா பேக் விலை மற்றும் அளவுகளோடு ஒப்பிடும் போது ஜியோவின் இலவச சேவைகள் கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் தற்போது அவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ட்ராய்.

- ஞா.சுதாகர்.
 Trending Articles

Sponsored