லேப்டாப் விலையை குறைக்க உதவும் இலவச ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ்..! #OpenSourceOSSponsoredடெஸ்க்டாப் கணினியோ அல்லது மடிக்கணினியோ... அதற்கான இயங்குதளம் என்றால்  நமக்கு தெரிந்ததெல்லாம் விண்டோஸ் இயங்குதளம் மட்டுமே. நாம் வாங்கும் ஒவ்வொரு கணினியில் இயங்கும் உரிமம் பெற்ற இயங்குதளத்திற்கு  கொடுக்கும் விலையை தெரிந்து கொண்டால் உங்களுக்கு மலைப்பாக இருக்கலாம். உரிமம் பெற்ற ஒரிஜினல் விண்டோஸ் இயங்குதளத்தின் விலை பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகம். விண்டோஸ் இயங்குதளம்  இல்லாமல் வேறு சில ஒப்பன் சோர்ஸ் இயங்குதளங்கள் இருக்கின்றன.முற்றிலும் இலவசமாக கிடைத்தாலும் விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் இதில் பெற முடியும்.அவற்றில் இருந்து சிறந்த ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்கள் சில...1. Ubuntu

Sponsored


உபுன்டு ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களில் பிரபலமானதும் மிகப்பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.இது ஆப்பிளின் மேக் ஓஎஸ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இயங்குதளத்தை மேம்படுத்த அடிக்கடி அப்டேட் கிடைக்கும். தற்பொழுது கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினாலும் அதற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். அதற்கான வழிமுறைகள் அதன் இணையதளத்தில் எளிதாக விளக்கப்பட்டிருக்கிறது

Sponsored


டவுன்லோட் செய்வதற்கு..

2. Raspbian PIXEL

உங்களிடம் இருக்கும் பழைய கணினியை கூட அதிக வசதிகளை கொண்டதாக மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் யோசிக்காமல் இந்த இயங்குதளத்தை தேர்ந்தெடுக்கலாம் இந்த இயங்குதளம் இயங்குவதற்கு 256 எம்.பி ரேம் இருந்தால் மட்டும் போதுமானது என்பது மற்றொரு சிறப்பு.

டவுன்லோட் செய்வதற்கு..

3. Linux Mint

பெரும்பாலான ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்கள் லினக்ஸை பின்பற்றியே உருவாக்கப்படுகின்றன..ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்களிலேயே எளிமையான வடிவமைப்பில் அசத்தும் இது அதிக வசதிகளையும் கொண்டிருக்கிறது புதிதாக ஓப்பன் சோர்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு முதல் தேர்வு இந்த இயங்குதளம்...

டவுன்லோட் செய்வதற்கு

4. Zorin OS

விண்டோஸ் இயங்குதளத்தை மட்டுமே பயன்படுத்தி பழகிவிட்டேன் அல்லது விண்டோஸின் வடிவமைப்பு பிடித்திருக்கிறது என்பவர்களுக்கு இருக்கிறது Zorin OS.
விண்டோஸ் 7 போலவே வடிவமைக்கப்பட்ட இதுவம் இலவசமாக கிடைக்கிறது.

டவுன்லோட் செய்வதற்கு..

ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்கள் கணினி வாங்கும் விலையை கணிசமான குறைக்க உதவும். இயங்குதளத்தை உங்கள் தேவைக்கு தகுந்தவாறு எளிதாக மாற்றியமைக்கலாம் என பல வசதிகளை ஓப்பன் சோர்ஸ் இயங்குதளத்தின் மூலம் பெறலாம்.

-மு.ராஜேஷ்
மாணவப்பத்திரிகையாளர்

 Trending Articles

Sponsored