சின்ன ஸ்க்ரூவுக்குள் கேமரா..! - வாட்ஸ்அப் வதந்தியா... உண்மையா?



இன்று தொழில்நுட்ப வளர்ச்சி ப்ரைவஸி என்ற விஷயத்தை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதிலும் ஆடையகங்களின் ட்ரையல் ரூம்களில் கேமராக்கள் மூலம் உடை மாற்றும் காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பல இடங்களில் உள்ளது. அவற்றை பாதுக்காக்க பல வழிகள் கூறப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ்அப்பில் பரவி வரும் ஸ்க்ரூ கேமராக்கள் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

Sponsored


கதவுகள், ஜன்னல்கள், அடுக்குகள் ஆகியவற்றில் இருக்கும் ஸ்க்ரூக்களுக்கு நடுவே கேமராவை வைத்து பதிவு செய்யும் ஸ்பை வகை கேமராக்கள் இப்போது விற்பனைக்கு வருகிறது. இவை அதிக ரெசல்யூஷன் கேமரா, குறைந்த ஒளியில் இயங்கக்கூடிய தன்மை என டெக்னிக்கலாக முன்னேறிய மாடல்கள்.. இதன் விலையும் குறைவு என்பதால் இதனை ஒருவர் வாங்கி பயன்படுத்துவதும் எளிதாக உள்ளது. 

Sponsored


பெரிய கேமராக்கள் மூலம் கண்காணிப்பது அருகில் இருப்பவருக்கு எளிதில் தெரிந்துவிடும் என்ற விஷயம் இருப்பதால் சிறிய கேமராக்களை தான் நாடுகிறது ஸ்பை உலகம். இது ஆரம்பத்தில் திருடர்களிடமிருந்து வங்கிகள், வீடுகள் உள்ளியவற்றை பாதுகாக்கத்தான் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும். தற்போது ட்ரையல் ரூம்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் இந்த கேமராக்கள் அதிகரித்து வருவதாக புகார் கூறப்படுகிறது.

Sponsored


சிறிய ரக கேமராவாக இருப்பதாலும், கதவில் உள்ள ஸ்க்ரூவில் இணைக்கப்பட்டிருப்பதாலும் எளிதில் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் உள்ளது. இதன் மூலம் பலரது ப்ரைவஸி பாதிக்கப்படுவதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவருகின்றன.

கதவுகளில் உள்ள ஸ்க்ரூக்களின் உள்ளே உலோக இடைவெளிதான் இருக்க வேண்டும். ஆனால் கண்ணாடி போன்ற அமைப்போ அல்லது மெல்லிய ஒளியை உமிழும் அமைப்போ இருந்தால் அந்த ஸ்க்ரூவில் கேமரா இருப்பதை உணருங்கள். அதனை அறிந்து சரியான புகார்களை எழுப்ப தவறாதீர்கள் என போலீஸும் கூறிவருகிறார்கள்.

ட்ரையல் ரூம்களிலாவது குறுகிய அறை தான் இருக்கும். ஸ்க்ரூக்களை கண்டறிவது எளிது . ஆனால் ஹோட்டல் ரூம்கள் போன்றவற்றில் உங்களால் கேமராவை கண்டறிவது கடினம். அது போன்ற தருணங்களில் அறையில் விளக்குகள் அனைத்தையும் அனைத்துவிட்டு செல்போன் டார்ச் மூலம் ஒளியை ஏற்படுத்தும் போது அது கேமராவில் பட்டு ஒளியை உமிழும். அதனை வைத்து ஸ்க்ரூ கேமராவை கண்டறியலாம். ஆனாலும், நமக்கு தெரியாமலே கேமராக்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகமே.

ட்ரையல் ரூம்களோ, ஹோட்டல் அறைகளோ உங்களது ப்ரைவஸியை சிறிய ஸ்க்ரூ கேமரா பறித்துவிடும். வெறும் கேமராக்கள் இருக்கிறதா என்று மட்டும் நிறுத்திவிடாமல் இனி ஸ்க்ரூ போன்ற சிறிய விஷயங்களையும் உன்னிப்பாக கவனியுங்கள். முடிந்தவரை அதிகம் அறிந்திராத இடங்களில் தங்காமல் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே நம்மை பாதுகாக்கும். ஸ்க்ரூ கேமாராவை கண்டுபிடித்த அதே தொழில்நுட்பம் தான் ஒருவரது பிரைவஸியை தொலையாமல் பாதுகாக்க ஒரு வழியை சொல்ல வேண்டும்.

ச.ஸ்ரீராம்



Trending Articles

Sponsored