கர்மா இஸ் பூமராங்... இனி கூகுள் நம்மை கேள்வி கேட்கும்! #GoogleFactCheckSponsoredஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் நின்று போனது துவங்கி ஆர்.சி.பி அணியில் கோலி காயம் என்பது வரை எல்லா செய்திகளையுமே தெரிந்து கொள்ள இன்று இணையம் என்ற விஷயம் முக்கியமானதாக மாறிவிட்டது அதிலும் கூகுள் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது எனும் அளவுக்கு கூகுள் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. 

ஆனால் எல்லா செய்திகளுமே முதல் கை தகவல்களாக இல்லை. கூகுள் உலகம் முழுக்க எங்கோ பதியப்படும் செய்திகளின் தொகுப்பை தான் வழங்குகிறது. அதனையும் பயனர்களிடமிருந்து தான் பெறுகிறது. . உதாரணத்திற்கு சென்னையின் ஒரு பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை பற்றி நீங்கள் கூகுளிடம் கேட்கிறீர்கள் என்றால், அது அந்த சாலையில் லொகேஷன் வசதியை செயல்படுத்தி வைத்திருக்கும் மக்களின் நகரும் வேகத்தை வைத்து உங்களுக்கு பதிலளிக்கும். போக்குவரத்து தகவல் மட்டுமல்ல, கூகுள் நமக்கு தரும் பல தகவல்கள் இவ்வாறு பெறப்பட்டது தான். டேட்டா என்ற விஷயத்தை ஆதாரமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களில் கூகுளும் ஒன்று. 

Sponsored


இந்த செயல்பாட்டு முறையில் தான் ஒரு முக்கிய பிரச்னையும் உள்ளது. அதாவது தவறான தகவல் பரவ நிறைய வாய்ப்புகள் உள்ளது. தவறான செய்திகளுக்கு எதிரான நிச்சயம் சரியான தீர்வை வகுப்போம் என்று ஃபேஸ்புக்கும் கூகுளும் சபதத்தை இந்த வருட ஆரம்பத்தில் எடுத்தன.

Sponsored


இதற்காக “ஃபேக்ட் செக்” என்ற வசதியை கூகுள் இணையதளத்திற்கு கொண்டு வர இருக்கிறது. இந்த வசதி உங்களை வந்து சேரும் தகவல், உண்மையா பொய்யா அல்லது இரண்டிற்கும் நடுவிலா என்பதை உங்களுக்கு கூறும்.

இதனை செயல்படுத்த கூகுள் பல்வேறு இணைய சேவைகளை பயன்படுத்த உள்ளது. தனது ப்ளாக்கில் இது குறித்த தகவல்களை பகிந்துள்ள கூகுள் நிறுவனம்.

“முதல் முறையாக ஒரு விஷயத்தை நீங்கள் கூகுளில் தகவலை தேடும் பொழுது, உங்களுக்கு கிடைக்கும் பதில் உண்மையா இல்லையா என்ற கணிப்புடன் உங்களை வந்து சேரப்போகிறது. முக்கியமாக மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களுக்கு இந்த வசதி மிக உதவியாக இருக்கும். யார் கூறிய தகவல், தகவல் என்ன, தகவல் உண்மையா போன்ற அனைத்து விஷியங்களையும் இந்த வசதி உங்களுக்கு தரும். இந்த வசதி கூகுளால்  செயல்படுத்தப்படுவது அல்ல. எனினும், மக்கள் இதனை நம்பி மேலும் சரியான முடிவுகளை எடுக்கலாம்.

ஆனால், இந்த வசதியினால் ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வர வாய்ப்புள்ளது. எனினும், அந்த இரண்டு பதில்களால் நமக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சரியான முடிவுகளை எடுக்க இயலும். ”

இந்த வசதியை வெளியிட கூகுள் 115 இணைய சேவை தாரர்களை அணுகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது இணையதளத்தில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா இல்லையா என்று கணிக்கும் சேவையை அண்மையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தவறான தகவல் கடும் சர்ச்சைகளை உருவாக்கியது நாம் அறிந்ததே.
கூகுள், ஃபேஸ்புக் ஆகியவற்றின் இந்த முடிவு, செய்தி தொடர்பு துறையில் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கவுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது!

கர்மா இஸ் பூமராங் என்ற வாசகம் ஆல் டைம் ட்ரெண்டிங்...அது தான் இப்போதும் நிரூபணமாகியுள்ளது. இது நாள் வரை நாம் கேள்வி கேட்ட கூகுள் இனி நம்மை கேள்வி கேட்கப்போகிறது. 

ம. சக்கர ராஜன்,

மாணவ பத்திரிகையாளர் Trending Articles

Sponsored