கோலி 'இன்'... தோனி 'அவுட்'... இது இன்டர்நெட் அம்பயர் ரிசல்ட்! #GoogleTrendsஐபிஎல் போட்டிகளில் முதல் வாரத்தில் சில வீரர்கள் ஆடாமலும், சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டதாலும் ஐபிஎல் சீஸன் 10 தற்போது தான் கலைகட்ட துவங்கியுள்ளது. இன்று நடைபெறும் இரண்டு ஆட்டத்திலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. காரணம் முதல் வார போட்டிகளில் காயம் காரணமாக  விளையாடாத இந்திய கேப்டன் விராட் கோலி ஆர்.சி.பி அணிக்கு கேப்டனாக திரும்ப விளையாடுகிறார். இரண்டாவது போட்டியில் புனே அணியில் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் தோனி களமிறங்கவிருக்கிறார். இந்திய அணியின் தல-தளபதியான கோலி- தோனி தான் இன்றைய இணைய வைரல்.

Sponsored


இந்தியாவின் கூகுள் ட்ரெண்ட்ஸில் கோலி- தோனி தேடல் என்ன சொல்கிறது என்று பார்த்தால். சரிக்கு சமமாக கோலியும், தோனியும் இணைய தேடலில் முன்னேறுகிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்த சதவிகிதத்தில் கோலி முன்னிலையில் இருந்தாலும், தமிழ்நாட்டில் கெத்து எப்பவுமே தோனி தான். மிக குறைவான ஆதரவே தமிழ்நாட்டில் கோலிக்கு உள்ளது. ஆர்.சி.பி அணியின் சொந்த ஊரான பெங்களூரிலும் தோனிக்கு தான் மாஸ். 

Sponsored


இன்றைய போட்டியில் காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு திரும்புவதால் கோலியை வரவேற்கிறார்கள் ரசிகர்கள். அதேசமயம் சமீபத்தில் தோனியின் ஆட்டம் குறித்த விமர்சனங்களை புனே அணியின் உரிமையாளர் கோயங்கா முன் வைத்தது அவரது ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியது,

Sponsored


இன்றைய ஆட்டத்தில் தோனி அணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கேற்ப புனே அணியிலும் தோனிக்கு நீடிக்கப்படுவதால். தோனி இன்றைய போட்டியில் இடம்பெறாமல் போகும் வாய்ப்புகள் உள்ளது. இது ட்விட்டரில் #dhonidropped என்ற ஹேஷ்டேக்குடன் இந்தியா ட்ரெண்டில் இடம்பிடித்தது.

தோனி கோலி இருவரும் இந்தியாவின் முக்கிய வீரர்கள். இந்திய அணியின் தல - தளபதியான இவர்கள் தான் இன்றைய விளையாட்டு உலகின் வைரல்கள். சென்ற முறை 953 ரன்களுடன் 4 சதம் அடித்த கோலியின் வருகையும், 9 சீஸனிலும் கேப்டனாக இருந்த தோனி அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் இன்னமும் சமூக வலைதளங்களும், இணையமும் வைரலாகும் என்பதில் ஆச்சர்யமில்லை.

ச.ஶ்ரீராம்Trending Articles

Sponsored