இட்லி முதல் இங்க்லீஷ் டீச்சர் வரை... வீட்டுக்கே வரவைக்கும் கூகுள் ஏரியோ! #GoogleAreoணையத்தின் எல்லாம் வல்ல நிறுவனமான கூகுளிடம் இருந்து வந்திருக்கும் புதிய ஆப்தான் இந்த ஏரியோ. இந்தியாவை மனதில் கொண்டு பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துவருகிறது கூகுள். சில நாட்களுக்கு முன்னர்தான் யூ-ட்யூப் கோ வசதியை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஏரியோவை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் வாங்க விரும்பும் பொருள், உணவு மற்றும் உங்கள் வீட்டிற்குத் தேவையான ப்ளம்பிங், எலக்ட்ரிக் வேலைகள் போன்ற சேவைகள் அனைத்தையுமே உங்கள் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்வதுதான் இந்த ஆப்பின் ஸ்பெஷல்.

Sponsored


ஏரியோவில் என்ன செய்திருக்கிறது கூகுள்?

Sponsored


இதன்மூலம் நீங்கள் விரும்பும் பல விஷயங்களை உங்கள் வீட்டிற்கே வரவழைக்கலாம். காலையில் சுவையான டிபன் வேண்டுமா? என்ன உணவு, எந்த ஹோட்டல், என்ன விலை எனப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யலாம். வீட்டிலேயே ஃபேஷியல் செய்ய வேண்டுமா? ஃபேஷியல் என சர்ச் செய்தால் போதும். உங்களுக்கு அருகில் இருக்கும் பியூட்டிஷியன்கள் விவரம் காட்டப்படும்; பார்த்து புக் செய்துகொள்ளலாம். ஏ.சி மெக்கானிக் தேவையா? அவரையும் இப்படித் தேடி புக் செய்துகொள்ளலாம். இதற்காக உணவு, பியூட்டி, வீட்டு மெயிண்டனன்ஸ், க்ளீனிங், ரிப்பேரிங், ஃபிட்னஸ் எனப் பல சேவைகளை வழங்குகிறது ஏரியோ. இவற்றைப் புக் செய்வதோடு மட்டுமில்லாமல், ஆன்லைனிலேயே பணம் செலுத்தும் வசதி, நிறுவனங்களின் சேவைகளுக்கு ரிவ்யூ கொடுக்கும் மற்றும் பார்க்கும் வசதி போன்றவையும் இருக்கிறது. 

Sponsored


இது ஆரம்ப நிலைதான். இவை தவிர அக்கவுன்டிங், ஜோதிடம், கட்டுமானம், பெயிண்டிங், சட்ட நிபுணர், வெப் டெவலப்பர் என பல சேவைகளை விரைவில் இதில் இணைக்க உள்ளது. எனவே ஒரு ஃபுட் டெலிவரி ஆப் அல்லது சர்வீஸ் App-ஆக மட்டுமின்றி, ஆல்ரவுண்டராக இருக்கிறது ஏரியோ. இந்த சேவைகளை கூகுள் தனியாகவோ அல்லது நேரடியாகவோ செய்யவில்லை. ஏற்கெனவே இதுபோன்ற சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கிவரும் பாக்ஸ் 8, ஃபிரஷ்மெனு, ஃபஸூஸ், அர்பன் கிளாப் போன்ற நிறுவனங்களோடு கைகோர்த்திருக்கிறது. இவர்கள் உதவியுடன் அவர்களின் தகவல்களை ஏரியோ ஆப்பின் கீழ் ஒன்றிணைத்துள்ளது கூகுள். 

எப்படி பயன்படுத்துவது?

ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து உங்கள் முகவரியை, மேப்பில் மார்க் செய்தாலே போதும். ஏரியோ பயன்படுத்த ரெடி. தற்போது இந்த ஆப் சேவையை இந்தியாவின் பெங்களூரு மட்டும் மும்பை ஆகிய இரு நகரங்களில் மட்டுமே பயன்படுத்தமுடியும். அதிலும் சில சேவைகள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடிகிறது; மேலும் சில சர்வீஸ்களுக்கு குறைவான ஆப்ஷன்களே கிடைக்கின்றன. ஆனால் மொத்த இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தும் போது இன்னும் பல விஷயங்களை கூகுள் இதில் சேர்க்கும் என எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே ஃபுட் டெலிவரி ஆப்ஸ்கள், சர்வீஸ் என ஆப்ஸ்கள் எனப் பல ஆப்ஸ்கள் இருக்கின்றன. அவற்றை விஞ்சும் அளவிற்கு இதன் பயன்பாடு மற்றும் ஆஃபர்கள் இருக்குமா, மற்ற ஆப்ஸ்களை ஏரியோ பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூகுளின் ஏரியோ போலவே ஒரு சேவையை வழங்கும் 'சர்வீசஸ்' என்ற வசதியை கடந்த ஆண்டுதான் அறிமுகம் செய்திருந்தது ஃபேஸ்புக். அதனை https://www.facebook.com/services என்ற இணைப்பில் சென்று பயன்படுத்தலாம். 

மக்களுக்கு பிராக்டிக்கலாக பயன்படும் இதுபோன்ற சேவைகள் மற்றும் புதுமையான ஐடியாக்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் களமிறங்கியிருக்கிறது ஏரியோ.

- ஞா.சுதாகர்.
 Trending Articles

Sponsored