இந்த 8 தளங்களில் போட்டோக்களுக்கு காப்பிரைட்ஸ் பஞ்சாயத்து இல்லை..!Sponsoredம்முடைய சோஷியல் மீடியா பயன்பாட்டிற்கோ அல்லது இணையதளத்திற்கோ ஒரு போட்டோ தேவை என்றால் என்ன செய்வோம்? உடனே கூகுள் இமேஜஸ் சென்று தேவையான படங்களை, பெயர் கொடுத்து தேடுவோம். கூகுள் நமக்குத் தேவையான போட்டோக்களை விடவும் அதிகமான படங்களைக் கொடுத்தாலும், அதில் இருக்கும் ஒரு சிக்கல் காப்பிரைட்ஸ் உள்ள படங்களையும் காட்டும். இதைத் தவிர்ப்பதற்காக லைசென்ஸ் இல்லாத படங்களை மட்டும் தனியாக தேடினால் குறைவான அல்லது தரமற்ற படங்கள் மட்டுமே கிடைக்கும். தரமான படங்கள்தான் வேண்டுமென்றால் நமக்கு ஒரே வழி, அதற்கென இருக்கும் பிரத்யேக தளங்களில் பணம் கொடுத்து வாங்குவதுதான். ஆனால் சில தளங்கள் சிறந்த புகைப்படங்களை இலவசமாகவே தருகின்றன; காப்பிரைட்ஸ் பிரச்னைகளும் வராது. அப்படி உங்களுக்கு உதவும் 8 இணையதளங்கள் இதோ...

 1. Pixabay

Sponsored


மொத்தம் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான இலவச புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறுகிறது பிக்ஸாபே. போட்டோக்கள் மட்டுமின்றி, வெக்டார் கிராபிக்ஸ், வீடியோக்கள், ஐகான்கள் போன்ற பிரத்யேக வடிவங்கள் ஆகியவையும் கிடைக்கின்றன. கூகுள் இமேஜில் தேடுவது போலவே அளவு, நிறம், புகைப்படத்தின் தன்மை ஆகியவற்றைக் கொடுத்து பொருத்தமான படங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். புகைப்படங்களை டவுன்லோட் செய்யும்போது 'ஹை ரெசொல்யூஷன்' உள்ள படங்களை டவுன்லோட் செய்ய, இந்த தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும். மற்றபடி எந்த சிக்கலும் இல்லாமலும் உதவுகிறது பிக்ஸாபே. இந்தப் புகைப்படங்களை எடிட் செய்யவும் உங்களுக்கு உரிமை உண்டு. உங்களுக்கு இந்த தளத்தின் சேவை பிடித்திருந்தால் அவர்களுக்கு பணமும் அனுப்பலாம். 

Sponsored


2. Picjumbo

2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 5 லட்சம் படங்கள் இதிலிருந்து டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பார்த்த இணையதளம் போலவே இதில் உள்ள படங்களையும் நீங்கள் இலவசமாக பயன்படுத்தவும், எடிட் செய்யவும் உரிமை உண்டு. உங்களுக்கு எந்த மாதிரியான படங்கள் வேண்டும் என்பதையும் தேடி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் படங்களைப் பொறுத்தவரை இதில் கொஞ்சம் குறைவான கலெக்ஷன்களே இருக்கின்றன. கூடுதலான கலெக்ஷன்களுக்கு ப்ரீமியம் மெம்பராக சொல்கிறது பிக்ஜம்போ. அதுமட்டுமின்றி தனித்தனிப் பிரிவுகளாகவும் படங்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.

 3. Unsplash:


ஹை ரெசொல்யூஷன் படங்களைக் கூட இதில் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். ஆனால் டெக்னாலஜி, இயற்கை, பெண், அலுவலகம் எனப் பொதுவான தலைப்புகளின் கீழ் தனித்தனியாக இருக்கிறதே தவிர, நமக்குத் தேவையான போட்டோக்களை மிகச்சரியாக தேடுவது என்பது இதில் கடினம். மேலும் சில தலைப்புகளில் குறைவான படங்களே இருக்கின்றன. பொதுவான போட்டோக்களைத் தேடுபவர்களுக்கு கைகொடுக்கக்கூடிய தளங்களில் ஒன்று இந்த அன்ஸ்ப்ளாஷ்.

4. Stockvault:

மேலே பார்த்த இணையதளங்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது இந்த ஸ்டாக்வால்ட். இந்த தளத்தில் சுமார் ஒரு லட்சம் போட்டோக்கள் இலவசமாகக் கிடைக்கும். நல்ல குவாலிட்டி போட்டோக்கள் கூட எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் இந்தப் புகைப்படங்களை சில விஷயங்களுக்கு பயன்படுத்தமுடியாது. அதாவது இந்த தளத்தில் இருந்து நீங்கள் இலவசமாக எடுக்கும் புகைப்படங்களை உங்கள் சொந்த blog-ல் பயன்படுத்தலாம். ஆனால் இணையதளங்களில் பயன்படுத்த முடியாது. உங்களுடைய சொந்த உபயோகம் மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களுக்கு பயன்படுத்த உரிமையுண்டு. ஆனால் வணிகரீதியாகப் பயன்படுத்த முடியாது என்பது சிக்கல்.

5. KaboomPics:

மூன்று லட்சத்திற்கும் மேலான படங்கள் இதன் கலெக்ஷனில் உள்ளன. போட்டோவைத் தேடுவதும், டவுன்லோட் செய்வதும் எளிது. தேவையான படங்களைத் தேடி எடுத்தபின், சிங்கிள் க்ளிக்கில் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்தப் புகைப்படங்களை நீங்கள் வணிக ரீதியாகக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

6. StockSnap


அதிகமான கலெக்ஷன்கள் கொண்ட மற்றொரு தளம்தான் இந்த ஸ்டாக்ஸ்னாப். உங்களுக்குத் தேவையான படங்களை தேதி, அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட படங்கள், அதிக லைக்ஸ் குவித்தது போன்ற அடிப்படையில் கூட தேடி எடுக்கலாம். படங்களை டவுன்லோட் செய்வதும் எளிதாக இருக்கிறது. இந்தப் படங்களைப் பயன்படுத்த எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. 

7. SplitShire :


இந்த தளத்தில்இருக்கும் படங்கள் அனைத்தும் பல பிரபல பத்திரிகைகளில் கூட வெளிவந்துள்ளன. அந்த அளவிற்கு ஏகப்பட்ட தரமான போட்டோக்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டறிவது மட்டுமே உங்கள் வேலை. இதில் இருக்கும் படங்களை வணிகரீதியாகக்கூட  பயன்படுத்தலாம். அதற்கு எவ்விதத் தடையும் இல்லை. இலவச வீடியோக்களும் இதில் கிடைக்கின்றன.

8. Pexels

இலவச படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான மற்றுமொரு தளம் இந்த பெக்ஸல்ஸ். இதில் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்த எந்தக் கண்டிஷன்களும் இல்லை. உங்களுடைய படங்கள் மற்றும் வீடியோக்களைக் கூட நீங்கள் இந்த இணையதளத்தில் பதிவேற்றலாம். படங்களைத் தேடுவதற்கு எளிமையாக இருக்கிறது. 

குறிப்பு:

மேற்கண்ட தளங்கள் அனைத்துமே பொதுவாக படங்களை டவுன்லோட் செய்யவும், பயன்படுத்தவும் ஏற்றதுதான். இவற்றை நீங்கள் தாரளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் தவறான நோக்கங்களுக்காகவோ,  வேறு தளங்களில் விற்பனை செய்யவோ இவற்றை பயன்படுத்தக் கூடாது.

- ஞா.சுதாகர்.
 Trending Articles

Sponsored