''ஏழை இந்தியா எங்களுக்குத் தேவையில்லை..!" என்ற snapchat சி.இ.ஓ இழந்தது என்ன?



Sponsored



''ஏழை இந்தியா எங்களுக்கு தேவையில்லை'' என்று கூறி ஸ்னாப் சாட் சிஇஓ இழந்தது என்ன?

இந்தியா தான் ஃபேஸ்புக்கின் ''கனெக்ட்'' மந்திரத்துக்கான விதையை விதைத்தது என்கிறார் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க், 

இந்தியாவுக்கு வந்ததால் தான் புதுமையான ஆப்பிள் நிறுவனத்தை நிறுவ முடிந்தது என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்,

Sponsored


இந்தியர்கள் சிலிக்கான் வேலியை ஆள்கிறார்கள் என்பதற்கு சத்ய நாதெள்ளாவும், சுந்தர் பிச்சையும் ஆகச்சிறந்த உதாரணங்கள்.

Sponsored


இவையெல்லாம் தற்போது எதற்கு என்று கேட்டால் உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஸ்னாப்சாட்டின்(snapchat)  சிஇஓ இவான் ஸ்பீகல் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு ஸ்னாப்சாட் ஆப்ஸை விரிவுபடுத்த விருப்பமில்லை என்று கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

2015-ம் ஆண்டு ஸ்னாப்சட்டின் வாடிக்கையாளர்களை எப்படி அதிகப்படுத்துவது என்பதற்கான கூட்டத்தில் நடந்ததை ஆங்கில இதழுக்கு விவரிக்கிறார் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ஆந்தோனி பொம்பிலியானோ.

ஸ்னாப்சாட் சிஇஓ ஸ்பீகல் '' இது ஒரு பணக்காரர்களுக்கான ஆப், இதனை இந்தியா, ஸ்பெயின் போன்ற  ஏழை நாடுகளுக்கு விரிவுபடுத்த எனக்கு விருப்பமில்லை'' என்று கூறியுள்ளார். பொம்பிலியானோ ஃபேஸ்புக்கில் பணி புரிந்து வந்தவர். ஸ்னாப்சாட்டில் முக்கிய பணியில் பணியமர்த்தப்பட்ட இவர். ஸ்னாப்சாட்டின் பங்குதாரர்களில் ஒருவர். இவர் ஸ்னாப் சாட்டிஒன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதில் ஸ்னாப்சாட் பங்குதாரர்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை உள்ளிட்ட விஷயங்களை சரியாக தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அப்போது இது பணக்காரர்களுக்கான ஆப், இந்தியா , ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்த தேவையில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார் பொம்பிலியானோ. 2015ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் ஒரு ப்ரஷன்டேஷனை பொம்பிலியானோ ஸ்பீகலுக்கு வழங்குகிறார். அது ஸ்பீகலுக்கு பிடிக்கவில்லை. இரண்டாவது ப்ரஷண்டேஷனும் பிடிக்கமல் போக. அடித்த நாளே பொம்பிலியானோ ஸ்னாப்சாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். 

இந்த சர்ச்சை வெளியானதும் நெட்டிசன்கள் ஸ்னாப்சாட்டின் மீதான தாக்குதலை ஆரம்பித்தனர். #boycottsnapchat என்ற ஹேஷ்டேக்கை இந்தியா ட்ரெண்டிங்கில் டாப் இடத்துக்கு கொண்டு வந்தது மட்டுமல்லாமல். ப்ளே ஸ்டோரில் ஸ்னாப்சாட்டுக்கு 1 ஸ்டார் ரேட்டிங் அளித்து அதன் ரேட்டிங்கை குறைத்தனர். மேலும் இந்த ஆப்ஸை டெலிட் செய்ய சொல்லியும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ஸ்னாப்சாட்டின் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

2 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த சம்பவம் தற்போது வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளதால் சமூக வலைதளங்களில் ஸ்னாப் சாட் மீதான அதிருப்தியை நெட்டிசன்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். 

உண்மையில் நடந்தது என்ன?

ஸ்னாப்சாட்டின் கூட்டத்தில் "உண்மையில் ஸ்னாப்சாட் அதிக டேட்டா வேகம் உள்ள இடங்களில் பயன்படுத்தப்படும் ஆப்பாக இருக்கும். அதனால் இணைய வேகம் குறைவான அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட இந்தியா, ஸ்பெயின் நாடுகளில் இதனை விரிவுபடுத்த முடியாது" என்று கூறியதாக ஸ்னாப்சாட் தரப்பு ட்விட்டரில் விளக்கம் கூறுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்னாப்சாட்டுக்கு லட்சக்கணக்கில் 1 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் ஸ்னாப்சாட்டுக்கு பதில் ஸ்னாப்டீலுக்கு தவறாக 1 ஸ்டார் ரேட்டிங் வழங்கி வருகின்றனர்.  இந்தியர்களின் உணர்வை கொஞ்சம் சீண்டினாலும் அது நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியாக பாதிப்பை உண்டாக்கும் என்பதை இந்த சர்ச்சை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது. 

-ச.ஸ்ரீராம்



Trending Articles

Sponsored