உலக பூமி தினத்துக்காக கூகுள் தந்திருக்கும் ஸ்பெஷல் அப்டேட்!இணையதளத் தேடுபொறி உலகின் ஜாம்பவான் கூகுள். கூகுள் வழங்கும் சேவைகளில் இமெயில், கூகுள் பிளஸ், கூகுள் மேப், கூகுள் எர்த் ஆகியவை குறிபிடத்தக்கவை. இதில் கூகுள் எர்த் மென்பொருள் சற்று வித்தியாசமான உருவமைப்புக் கொண்டது. இதில் விண்வெளியில் இருந்துகொண்டு பூமியை நாம் பார்த்தால் பூமி எப்படித் தோற்றமளிக்கும் என்பதைக் கூகுள் எர்த் மூலம் காணமுடியும். இதில் உலகிலுள்ள ஏழு அதிசங்களையும் 3D - யில் காணும் வசதி கொண்டது. அதேபோலப் பூமியில் இறங்கி ஸ்ட்ரீட் வியூ(Street view)-வில் நேரடியாக அந்த இடங்களைக் காணலாம். இதுதவிர, அதிலுள்ள டூல்ஸ்களின் மூலம் ஒரே இடத்தின் பழைய புகைப்படம் மற்றும் புதிய புகைப்படம் ஆகியவற்றைத் தெளிவாகக் காணலாம். நாம் காணும் இடம் கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும். மேலும், ஓர் இடம் தற்போது இருக்கும் சாலை வசதிகளின் அப்டேட் என அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீதியையும், ஒவ்வொரு தெருவையும் துல்லியமாகக் காணலாம்.

Sponsored


Sponsored


பொதுவாக ஒருவர் வீடு வாங்க விரும்பினால் கூகுள் எர்த்தில் முதலில் அந்த வீடு உள்ள சாலைகளில் பயணிக்கலாம். வீட்டைச் சுற்றிலும் என்னென்ன வசதிகள் இருக்கின்றன. மருத்துவமனை, கடைகள், காய்கறி மார்க்கெட், உணவகம் என அனைத்தையும் இதில் பார்க்க முடியும். கூகுள் மேப்பில் ஒர் அளவுக்கு மேல் ஜூம்(Zoom) செய்து பார்க்க முடியாது. ஆனால் கூகுள் எர்த்தில் தரை வரைக்கும் ஜூம் செய்து பார்க்கும் வசதி உண்டு. இந்தியாவிலுள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை முப்பரிமாணம் (3D) மற்றும் புகைப்படங்கள் ஆகியவை நேரில் நாம் சென்று காண்பதைப்போல இருக்கும். மேலும் 360 டிகிரி படங்கள் தாஜ்மஹாலின் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் வகையில் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகில் மிக முக்கியப் பகுதிகள் கூகுள் எர்த் மென்பொருளில் தடை செய்யப்பட்டிருக்கும்.

Sponsored


இதில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்துகொண்டே உலகம் முழுவதும் சுற்றி வருவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதில் இருந்து ஆராய்ச்சிகளுக்குத் தேவையான பூமியின் புகைப்படங்களை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்தமான இடங்களைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடனடியாக அந்த இடத்தை வேகமாக அடையலாம். ஏராளமான வசதிகளை விரல்நுனிக்கு கொண்டு வந்த 'கூகுள் எர்த்' மென்பொருள், நாளை புதிய அப்டேட்களை வெளியிடப் போகிறது. இதுதவிர புதிய வசதிகளையும் புதிதாக சேர்க்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதில் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதி 'உலக பூமி தினம்' கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த அப்டேட்கள் கொண்டு வரப்படுகிறது. இதில் முன்னர் இருந்த வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுப் பயனாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

<br />

இந்த மாற்றம் செய்யப்பட்ட மென்பொருளில் மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள் அனைத்தையும் துல்லியமாகக் காண முடியும். இதற்காகக் கூகுள் நிறுவனம் உலகிலுள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் கேமரா பொருத்திய கார்களை ஓடவிட்டுப் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பயணம் செய்யலாம்.

- துரை.நாகராஜன்.Trending Articles

Sponsored