இணையம் இல்லாமலும் இனி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம்!Sponsoredபுகைப்பட விரும்பிகளுக்கு மிக விருப்பமான சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராம், தற்போது ஆஃப்லைன் மோட் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் இணையம் இல்லாதபோதும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியும்.

பொதுவாக இணையம் மூலம் செயல்படும் அப்ளிகேஷன்களை, சிக்னல் இல்லாத நேரங்களில் பயனாளர்களால் பயன்படுத்த முடியாது. இந்தியா போன்ற இணைய வேகம் குறைவான நாடுகளில் உள்ள பயனாளர்களின் நலன் கருதி, சோஷியல் மீடியா நிறுவனங்கள் குறைந்த இணைய வேகத்திலும் செயல்படும் லைட் வெர்சன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இணையம் இல்லாத நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய ஆஃப்லைன் மோடை ஃபேஸ்புக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது இதே வசதி ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

Sponsored


ஆஃப்லைன் மோடில் இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே லோட் ஆன புகைப்படங்களைப் பார்த்து ரசிக்கவும், லைக் செய்யவும், அவற்றுக்கு கமென்ட் செய்யவும்கூட முடியும். மேலும், விருப்பமானவருக்கு டைரக்ட் மெஸேஜ் அனுப்பவும் முடியும். நாம் லைக் செய்தது, கமென்ட் அனுப்பியது போன்றவற்றை இன்ஸ்டாகிராம் அப்டேட் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டிஃபிகேசன் மூலம் தெரியப்படுத்திவிடும். இந்த ஆஃப்லைன் மோட் வசதியானது தற்போது ஆண்ட்ராய்டு வெர்சன்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
 

Sponsored
Trending Articles

Sponsored