அணையில் சோலார் பேனல்கள்... நீராவி தடுத்து, மின்சாரமும் தயாரிக்கிறார்கள்!Sponsored"அணை தண்ணி ஆவியாகாம இருக்க தெர்மாக்கோலா? என்னய்யா ஆச்சு அமைச்சருக்கு”

Sponsored


அனைத்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஆளுக்கொரு மெஸெஜ் ஆவது இதைப் பற்றி எழுதாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஓவர் நைட்ல ஒபாமா ஆன அமைச்சரை கலாய்ப்பது இருக்கட்டும். சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரே இதையெல்லாம் பேசியிருப்பதாக சொல்கிறார்களே! உண்மையில், தெர்மாக்கோல் மேட்டர் ஒர்க் அவுட் ஆகுமா?ஆகும். வழக்கம் போல இதையும் செய்து காட்டியிருக்கிறார்கள் ஜப்பான்காரர்கள். ஒரு படி மேலே போய் தெர்மாக்கோல் மீது சோலார் பேனல்களை வைத்து மின்சாரமே தயாரித்திருக்கிறார்கள்.

Sponsored


PHOTOGRAPH COURTESY: KYOCERA CORPORATION

இதை செய்திருப்பது ஜப்பாந்தான். ஆனால், 2006ல் இதற்கு விதைப் போட்டது ஃபிரான்ஸ்.அதன் பின், 2007ல் அமெரிக்காவில், நேபா வேலி (Napa valley) பகுதியில் ஒருவர் தனக்குச் சொந்தமான குளம் ஒன்றில் இதை முயற்சித்து வெற்றிகரமாக மின்சாரம் தயரித்தார். ஆனால், சூது கவ்வும் ரேஞ்சுக்கு சின்ன பட்ஜெட்டில் செய்து கொண்டிருந்ததை எந்திரன் பட்ஜெட்டுக்கு எகிறியடித்து ஹிட் அடித்தவர்கள் ஜப்பான்காரர்கள்.

யமக்குரா அணையில் (Yamakura dam) ஒரு லட்சத்து எண்பதாயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 51000 சோலார் பேனல்களை பொருத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு 16,170 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறார்கள். இது கிட்டத்தட்ட 8000 வீடுகளுக்கு ஆண்டு முழுவதும் மின்சாரம் கொடுக்க போதுமான அளவு என்கிறார்கள். கூடங்குளத்தின் இரண்டு யூணிட்டையும் சேர்த்து 2000 மெகாவாட் தான் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். அது மட்டுமல்ல...ஆண்டுக்கு 19000 பீப்பாய் எண்ணெயை இது மிச்சப்படுத்தும்.
இந்த புராஜெக்ட் ஜப்பானைச் சேர்ந்த க்யோசெரா (Kyocera) என்ற நிறுவனம் மற்றும் ஃப்ரான்ஸை சேர்ந்த Ciel et Terre என்ற நிறுவனத்தின் கூட்டு முயற்சி.2016 ஜனவரி மாதம் ஆரம்பித்த இதன் கட்டுமான பணிகள் முடிந்து, சென்ற மாதம்தான் இந்த அணை மின்சாரம் தயாரிக்க தொடங்கியிருக்கிறது. 

சோலார் பேனலை தாங்கும் பிளாட்ஃபார்மில் உலோகம் ஏதுமில்லை. மறுசுழற்சிக்கு உள்ளாக்கக்கூடிய, பாலி எத்திலீன் பொருளால் செய்திருக்கிறார்கள். துருப்பிடிக்காது. பிளாட்ஃபார்ம் நிலையாக இருப்பதற்காக அணையின் ஆழம் வரை சென்று ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள். அடிக்கடி சூறாவளி வரும் பிரதேசம் ஜப்பான். ஆனால், இந்த சிஸ்டம் எந்த சூறாவளியையும் தாங்கி நிற்கும். 
இந்த முறையால் நீர் ஆவியாவது குறையும். ஆல்கே எனப்படும் கடல்பாசியின் வளர்ச்சியும் குறையும். தண்ணீரின் தரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. 


உலகம் முழுவதும் வறட்சி மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அது போலவே மின்சாரமும். முறைசாரா எரிசக்தியைத் தான் எதிர்காலத்தில் நம்ப வேண்டியிருக்கும். எனவே அனைத்து நாடுகளும் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்க முனைப்பு காட்டி வருகின்றன. இந்த முறை இரண்டுக்கும் ஒரு சின்னத் தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதை நம் நாட்டில் பயன்படுத்துவதற்கு முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.

முதலில் ஏரி,அணைகள், குளங்களை சரியாக பரமாரிக்க வேண்டும். ஜப்பான்காரர்கள், அதை செய்துவிட்டுதான் அதன் மேல் சோலார் பேனல்களை பொருத்தினார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதைச் செய்யாமல், தெர்மாக்கோலை மட்டுமல்ல; எதை மிதக்க விட்டாலும் உபயோகமில்லை.Trending Articles

Sponsored