வாட்ஸ்அப் மெசேஜ்களை படித்து சொல்லும் 'சிரி'...!வாட்ஸ்அப் நிறுவனம், ஐபோனுக்கான தனது செயலியில் நிறைய அப்டேட்களைச் செய்துள்ளது. வாட்ஸ்அப் செய்திகளை இனி ஐபோனின் 'சிரி' மூலம் படிக்கும்படி, ஐபோனுக்கான வாட்ஸ்அப் அப்ளிகேஷன் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Sponsored


ஐபோனின் இயங்குதளமான ஐ.ஓ.எஸ்-ல் செயல்படும் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் பெயர் தான், 'சிரி'. நாம் கொடுக்கும் வாய்ஸ் கமென்ட்டுகளுக்கு ஏற்ப, ஸ்மார்ட்போன்களில் இயக்கங்களை மேற்கொள்ளும் ஒரு தொழில்நுட்பம் இது. தற்போது, இதன்மூலம் வாட்ஸ்அப்பில் வந்த சமீபத்திய செய்திகளைப் படிக்கும்படி வாய்ஸ் கமென்ட் தரலாம். யாரிடமிருந்து செய்தி வந்திருக்கிறது, என்ன செய்தி என்பது போன்ற தகவல்களுடன், நமக்காக 'சிரி' வாட்ஸ்அப் செய்திகளை வாசிக்கிறது.

Sponsored


ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்டேட்டஸ்களை செலெக்ட் செய்யவும், அவற்றை ஃபார்வேர்டு செய்யவும், டெலீட் செய்யவும்கூட முடியும். கால்ஸ் டேப் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களின் திரையிலும் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 89 எம்பி அளவிலான அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை, ஐபோன் யூசர்கள் ஆப் ஸ்டோரில் அப்டேட் அல்லது டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

 

Sponsored
Trending Articles

Sponsored