லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்குனா மட்டும் போதாது... இதையும் கவனிங்க பாஸ்!



ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் தங்களது மொபைலை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார்கள். அவ்வப்போது தேவையில்லாத கேஷ் (Cache) ஃபைல்களை டெலீட் செய்து மொபைலின் செயல்திறனை அதிகரித்துக் கொள்வார்கள். ஆனால், அதையும் தாண்டி மொபைல் பாதுகாப்பானதாகவும், செயல்திறனை அதிகரிக்கவும் மெனக்கெட அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் அல்லவா!

Sponsored


ஓப்பன் சோர்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டில் உள்ள சில குறைகளைப் பயன்படுத்தி, ஸ்மார்ட்போனில் ஊடுருவித் தகவல்களைத் திருடுவது மிக எளிது. இந்தக் குறைகளை சரிசெய்து ஹேக்கர்களுக்கு 'செக்' வைப்பதற்காகதான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அப்டேட் கொண்டுவருவார்கள். மேலும், ஹார்ட்வேர் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படும்விதமாக புதுப்புது வசதிகளோடு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்படும். அதனால் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், சிஸ்டம் அப்டேட் செய்வது நல்லது. அப்ளிகேஷன்கள் மொபைல் பேட்டரியைப் பயன்படுத்தும் அளவைக் குறைப்பதிலிருந்து பலவிதமான நன்மைகள் அப்டேட் செய்வதால் ஏற்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், சிஸ்டம் அப்டேட் செய்வதால் மொபைலின் செயல்திறன் அதிகரித்து, மொபைல் ஹேக்கர்களால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

Sponsored


அப்டேட் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :

1. நவீன வசதிகளைப் பெற முடியும்.
2. முந்தைய வெர்சனை விட, லேட்டஸ்ட் அப்டேட்டில் பலவிதமான குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் மொபைலின் செயல்திறனை அதிகரித்துக்கொள்ள முடியும்.
3. ஹேக்கர்களிடம் இருந்து நம் தகவல்கள் திருடுபோவதைத் தற்காத்துக் கொள்ள முடியும்.
4. சீக்கிரம் சார்ஜ் தீருவதைக் குறைத்து, பேட்டரி ஆயுள் அதிகரிக்க உதவும்.
5. அப்ளிகேஷன்கள் RAM பயன்படுத்தும் அளவைக் குறைக்க முடியும் என்பதால், மொபைல் வேகமாக செயல்பட அப்டேட் உதவும்.

'என் மொபைல் இப்பவே நல்லாதான் வொர்க் ஆகுது. நான் ஏன் பாஸ் அப்டேட் செய்யனும்?' - சிறப்பாக இயங்கும் காரை அவ்வப்போது சர்வீஸ் செய்து அதன் திறனை மேலும் அதிகரிப்பது போலதான், சிஸ்டம் அப்டேட் செய்வதும். சிஸ்டம் அப்டேட் செய்வதால் உங்கள் மொபைலின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Sponsored


'அப்டேட் கொடுத்தா மொபைல் ஸ்லோவாகிரும்னு சொல்றாங்களே!' - அப்டேட் செய்வதற்கு முன், கேஷ் மெமரியை டெலீட் செய்துகொண்டால் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு குறைவு. அப்டேட் செய்தபின்னும் மொபைல் ஸ்லோவாக இருந்தால் கேஷ் மெமரியை டெலீட் செய்து சரிப்படுத்தலாம்.

அப்டேட் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்கும் மொபைல், டேப்லட்களை அப்டேட் செய்ய பெரிய உதவிகள் எல்லாம் தேவையில்லை. நல்ல இன்டர்நெட் வசதி இருந்தால் வீட்டில் இருந்தபடி நாமே அப்டேட் செய்துகொள்ளலாம். அப்டேட் செய்வதற்கு முன், ஸ்மார்ட்போன் தகவல்கள் அனைத்தையும் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

1. இன்டர்நெட் டேட்டா தேவையான அளவில் இருந்தால் தடையற்ற இன்டர்நெட் சிக்னல் கிடைக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வைஃபை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு.

2. இணையத்துடன் கனெக்ட் செய்தபின், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் சென்று கடைசியாக இருக்கும் 'About Phone' ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். அதன்பின், 'System Updates' ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் மொபைலுக்கான அப்டேட் எதுவும் இருந்தால் அதைப்பற்றிய விவரங்களைத் திரையில் காண்பிக்கும். ஒருவேளை அப்டேட் எதுவும் இல்லையென்றால், உங்கள் மொபைல் அப்டேட்டில் தான் இயங்குகிறது எனப்பொருள். 

3. அப்டேட் முழுவதும் டவுன்லோடு ஆகும்வரை உங்கள் ஸ்மார்ட்போனில் இணையத் தொடர்பு இருப்பது அவசியம். சிஸ்டம் அப்டேட் அனைத்தும் டவுன்லோடு ஆனதும், மொபைல் ரீஸ்டார்ட் ஆகி அவை அனைத்தும் இன்ஸ்டால் ஆகத் தொடங்கும். இது கொஞ்சம் நேரமெடுக்கும் என்பதால் ஓய்வாக இருக்கும் நேரத்தில் செய்வது நல்லது. உங்கள் அப்டேட்டுக்கு ஏற்ப டேட்டாவின் அளவு இருக்கும் என்பதால் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு டேட்டா காலியாகலாம். அதையும் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

4. அப்டேட் இன்ஸ்டால் ஆனதும் 'Update Complete' என்ற திரை தோன்றும். அவ்வளவு தான் உங்கள் மொபைல் இப்போது லேட்டஸ்ட் மென்பொருள் வசதிகளுடன் அப்டேட் ஆகிவிட்டது.

ஆண்ட்ராய்டில் சிஸ்டம் அப்டேட் செய்வதைப் போலவே, அவ்வப்போது அப்ளிகேஷன்களையும் அப்டேட் செய்துகொள்வது நல்லது. ஆண்ட்ராய்டில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட்கள் கொண்டுவரப்படும். எனவே, அவற்றையும் நிறுவி அப்ளிகேஷன்களின் செயல்திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். மேலும், தேவையில்லாத அப்ளிகேஷன்களை அவ்வப்போது அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.



Trending Articles

Sponsored