உசேன் போல்ட்டையே 7-வது இடத்துக்கு தள்ளும் ரியாக்‌ஷன் டைம்... எப்படிக் கணக்கிடுகிறார்கள்?



Sponsored



கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில், ஓடிய 8 வீரர்களில் ரியாக்‌ஷன் டைம் படி, உசேன் போல்ட்டுக்கு 7ஆவது இடமே கிடைத்திருக்கிறது. குறைந்த ரியாக்‌ஷன் டைமுடன் தென் ஆப்பிரிக்க வீரர் அகெனி சிம்பின் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் ஓடிய வீரர்களின் ரியாக்‌ஷன் டைம் பட்டியலை கீழே பார்க்கவும். 


ரியாக்‌ஷன் டைம் :
ஓட்டப் பந்தயம் தொடங்கும் போது ”ஆன் யுவர் மார்க்... கெட் செட்... கோ” (துப்பாகிச் சத்தம் கேட்கும்) முறையில் தான் ஓடத் தொடங்குவார்கள். அப்படி கோ சமிக்ஞை காட்டிய உடன், யார் முதலில் சத்தத்தை உள்வாங்கி ஓடத் தொடங்குகிறார் என்பதைத் தான் ரியாக்‌ஷன் டைம் என்று சொல்கிறோம். இது நம் அன்றாட வாழ்விலும் பார்க்கக் கூடிய  ஒன்று தான். நம்முடைய நண்பர்களிலேயே சிலரை கூப்பிட்டு பத்து நிமிடம் கழித்துதான் திரும்பி பார்ப்பான் என்றால் அவரின் ரியாக்‌ஷன் டைம் 10 நிமிடம். சிலரை  கூப்பிட்டு முடிப்பதற்குள் "என்ன மச்சான் " என்று நமக்கு பதில் கிடைத்தால் அவரின் ரியாக்‌ஷன் டைம் ஆசம் என்று அர்த்தம்.
ராணுவம், காவல்துறை, தேசிய பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடும் வீரர்கள், வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு இந்த ரியாக்‌ஷன் டைம் என்பது அழிக்க முடியாத சிலபஸ் டெஸ்ட்களில் ஒன்று. 
உங்களுடைய ரியாக்‌ஷன் டைமை இங்கே சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன். 

Sponsored


உங்களுடைய ரியாக்‌ஷன் டைமை இங்கே சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்.

 

Your browser does not support the audio element.
On your mark Set Go!

 

துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடன் ஓடத் தொடங்க வேண்டியதுதானே... என்று ஓடினால் "ஃபவுல் ஸ்டார்ட் "என அறிவித்துவிடுவார்கள். துப்பாக்கிச் சத்தம் கேட்டு 100 மில்லி செகண்டுக்குப் பிறகு தான் ஓடத்தொடங்க வேண்டும். ஒரு நொடியை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது ஒரு மில்லி செகண்ட்.  அதாவது 1/1000 = 0.001. இப்படி 0.100 நொடிக்கு பிறகுதான் ஓடத் தொடங்க வேண்டும். 
ஒருவேளை துப்பாகிச் சத்தம் கேட்டு 100 மில்லி செகண்டுக்குள் ஓடத் தொடங்கினால், அவ்வளவு ஏன் உடலின் பொசிஷன்களை மாற்றினால் கூட ஸ்டார்டிங் பிளாக்குகளில் இருக்கும் சென்சார்களே "ஃபவுல் ஸ்டார்ட் " கொடுத்துவிடும்.

Sponsored




ஸ்டார்டிங் பிளாக் :
இன்று சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்டார்டிங் பிளாக்குகளிலேயே சென்சார்கள், ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. டிராக்குகளில் ஓட இருக்கும் எட்டு வீரர்களுக்கும் மைக்ரோ செகண்ட் வித்தியாசத்தில் கூட தூப்பாக்கிச் சத்தம் மாறுபட்டு கேட்கக் கூடாது என்பதற்காக நவீன ரக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 
ஓட்டக்காரர்கள் ஸ்டார்ட்டிங் பிளாக்கில், தங்கள் கால்களை அழுத்தி ஓட செட் செய்து கொள்ளும் போது ஏற்படும் அழுத்தத்தை பதிவு செய்து கொள்கிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனேயே சென்சார் ஒரு குறிப்பு எடுத்துக் கொள்ளும், 100 மில்லி செகண்டுக்குப் பிறகு ஒரு குறிப்பு எடுத்துக் கொள்ளும், வீரர் ஓடத் தொடங்கிய உடன் ஒரு குறிப்பு எடுத்துக் கொள்ளும்.


அழுத்தமே ஓட்டம்... !
வீரர்கள் தங்களை ஸ்டார்டிங் பிளாக்கில் ஓட செட் செய்து கொண்டதில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்கும் வரை, ஸ்டார்ட்டிங் பிளாக்கில் கொடுத்த அழுத்த அளவுகளில்,  அதிக பட்சமான அழுத்த  அளவைத் தாண்டிய அழுத்தத்தை, எப்போது  ஏற்படுகின்றதோ அந்த மில்லி செகண்டே ஓடத் தொடங்கியதாகக்  கணக்கில் எடுத்துக் கொள்ளும். இப்படித் தான் "ஃபவுல் ஸ்டார்ட்" செய்யும் வீரர்களை கண்டு பிடிக்கிறார்கள்.


-மு.சா.கெளதமன்,

இன்டராக்டிவ் : ஆர்.ராஜு
 



Trending Articles

Sponsored