ரெண்டு பீஸா, ரெண்டு பர்கர்... இதுதான் உங்கள் பாஸ்வேர்டுன்னு சொன்னா நம்புவீங்களா?



ம் மெசேஜிங் பழக்கங்களையே முற்றிலுமாக மாற்றிவிட்டன இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்கள். மெசேஜ் பூஸ்டர்கள் போட்டு, 3X4 கீ-போர்டில் டெக்ஸ்ட் டைப் செய்து, இடை இடையே சுவாரஸ்யங்களுக்காக ஸ்மைலிகள் போட்டு அனுப்பியது எல்லாம் தற்போது பழைய கதை ஆகிவிட்டது. வாட்ஸ்அப், ஹைக், ஃபேஸ்புக் போன்ற சேவைகளின் வருகைகளுக்குப் பிறகு மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஆதிக்கம் செலுத்துவது எமோஜிக்கள்தான். இரண்டு எழுத்து வார்த்தையோ அல்லது நீண்ட நெடிய மெசேஜோ... எமோஜிக்கள் இல்லாமல் உருவாவதே இல்லை. இந்த வரிசையில் விரைவில் பாஸ்வேர்டுகளும் இணையவிருக்கின்றன. ஆம், தற்போது இந்த எமோஜிக்களை எண்களுக்குப் பதிலாக பாஸ்வேர்டுகளாகப் பயன்படுத்தவும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் உங்களின் மொபைல் முதல் கணினி வரை...எல்லா இடங்களிலும் எமோஜிக்களே பாஸ்வேர்டாக இருக்கலாம். ரெண்டு பீஸா எமோஜி, ரெண்டு பர்கர் எமோஜி என உங்கள் பாஸ்வேர்டைக் கூட ஸ்பைசியாக வைத்துக்கொள்ளலாம்.

Sponsored


இந்தத் தொழில்நுட்பம் பற்றி கடந்த 2015-ம் ஆண்டே அறிவித்தது இங்கிலாந்தைச் சேர்ந்த இன்டெலிஜென்ட் என்விரான்மென்ட் நிறுவனம். "எண்களை நினைவில் வைத்துக்கொள்வதை விடவும், எமோஜிக்களை நினைவில் வைத்துக் கொள்வது எளிது. மேலும் நான்கு இலக்க பாஸ்வேர்டை விடவும் பாதுகாப்பானது இந்த முறை" எனத் தெரிவித்தது அந்நிறுவனம். மேலும் திரும்பத் திரும்ப வராத வகையில் 7,290 நான்கு இலக்க பாஸ்வேர்டுகளையே உருவாக்க முடியும். ஆனால் எமோஜிக்கள் மூலம் 3,498,308 மில்லியன் பாஸ்வேர்டுகளை உருவாக்க முடியும் எனவும் அறிவித்தது. தற்போது இதேபோல ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் எமோஜியை அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு லாக்-இன் சிஸ்டம் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த சிஸ்டத்தில் எமோஜி பாஸ்வேர்டுகள் மூலமாகத்தான் போனை லாக் செய்யவோ, அன்-லாக் செய்யவோ முடியும். தற்போது சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. 

Sponsored


Sponsored


இந்த சிஸ்டத்தைப் பரிசோதிக்க மொத்தம் 53 பேரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 27 பேருக்கு எமோஜி மூலம் உருவாக்கப்பட்ட பாஸ்வேர்டு அமைப்பைக் கொண்ட ஆண்ட்ராய்டு போன்களும், மீதி 26 பேருக்கு சாதாரண பின் பாஸ்வேர்டுகள் கொண்ட போன்களும் தரப்பட்டன. இரண்டு பிரிவினருமே பலமுறை போனை லாக் செய்து, அன்-லாக் செய்தனர். பின் எண்களைப் பாஸ்வேர்டாகக் கொண்ட பலரும் உடனே அதனை மனப்பாடம் செய்து பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் எமோஜிக்களை பாஸ்வேர்டாக வைத்தவர்கள் கூடுதல் ஆர்வத்துடன் சோதனையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் பாஸ்வேர்டுக்கான எமோஜிக்களை வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்துள்ளனர். உதாரணமாக பிடித்த எமோஜிக்கள், திரையில் தோன்றும் வடிவங்களுக்கு ஏற்ற எமோஜிக்கள், படத்தின் பெயர், பாடலின் வரி போன்ற விஷயங்களை எல்லாம் மனதில் கொண்டு எமோஜி பாஸ்வேர்டுக்களைத் தேர்வு செய்துள்ளனர். வழக்கமான முறையைவிடவும் சுவாரஸ்யமாக அமைய இதுவும் ஓர் காரணம்.

டிஜிட்டல் தரவுகளின் அளவும், பயன்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அவற்றின் பாதுகாப்பும் மிக முக்கியமாகிறது. இதில் முக்கியப் பங்கு வகிப்பவை பாஸ்வேர்டுகள்தான். ஒரு காலத்தில் எண்கள் மட்டுமே பாஸ்வேர்டுகளாகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் எழுத்துகள், சிறப்புக் குறியீடுகள் என பாஸ்வேர்டுகளின் வலிமை அதிகரித்துக் கொண்டே சென்றது. தற்போது கைரேகை, கருவிழி என பயோமெட்ரிக் தகவல்கள் கூட நம் பாஸ்வேர்டுகளாகப் பயன்படுகின்றன. அந்த வரிசையில் எமோஜிக்களும் இணையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!



Trending Articles

Sponsored