இணையம், விலை, வாய்ஸ் கால், இதரச் சேவைகள்... ஜியோவில் எவையெல்லாம் ஹிட்? #VikatanSurveyResultsSponsoredமார்ச் மாதம் TRAI கணக்கின்படி ஜியோதான் அதிவேக டெளன்லோடு  கொண்ட நெட்வொர்க். ஆனால், ஏர்டெல் சர்வதேச நிறுவனங்களின் கணக்கைக் காட்டி தனது நெட்வொர்க் தான் வேகமானது என்கிறது. மற்ற எந்த ஒரு நிறுவனத்தையும் விட பயனர்கள் தான் அதைச் சொல்ல வேண்டும். TRAI ஆயிரம் சொல்லலாம். ஆனால் உண்மையை நீங்கள்தான் சொல்ல வேண்டும். சொல்லுங்கள்... ஜியோ எப்படி?

என சென்ற வாரம் ஒரு சர்வே நடத்தினோம். கிட்டத்தட்ட 18000 ஜியோ பயனர்கள் இந்த சர்வேயில் கலந்துகொண்டார்கள். அவர்கள் தந்திருக்கும் தகவல்கள் இதோ..

அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே ஜியோ கில்லியாகத்தான் இருந்திக்கிறது. 6 மாதங்களுக்கும் மேலாக ஜியோவை பயன்படுத்துவதாக 68.3% பேர் சொல்லியிருக்கிறார்கள்.

Sponsored


Sponsored


ஜியோதான் வேகமான இணையச் சேவையைத் தருகிறது என TRAI சொன்னதை கண்டிஷன்ஸ் அப்ளையோடு மறுத்திருக்கிறார்கள். ஜியோதான் சிறந்தது என 27% பேர் மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். 42.9% பேர் நல்ல வேகம் என்றாலும் சீராக இருப்பதில்லை என குறை சொல்கிறார்கள்.

ஜியோவின் விலைதான் ஹாட். இணைய வேகத்தில் மற்ற நெட்வொர்க்கை விட டாப் எனச் சொன்னது 30.3% பேர்தான்.

வாய்ஸ் கால்கள்தான் ஜியோவின் குறை எனச் சொல்லி வருகிறார்கள். அதை மெய்ப்பிக்கும்படி இருக்கிறது பயனர்களின் வாக்குகள்.

இணையத்துக்காக மட்டுமே ஜியோவை பயன்படுத்துவோம் எனப் பெரும்பாலானோர் சொல்கிறார்கள். இவர்களை எப்படி தனது மற்ற சேவைகள் பக்கம் ஜியோ திருப்பும் என்பதுதான் இப்போதிருக்கும் சவால்.

என்னதான் ஜியோவுக்குப் பெரிய ஆதரவு இருந்தாலும், அதையே தங்களது முதல் எண்ணாக 81.7% பேர் மாற்றவில்லை. இதுவும் ஜியோவுக்கு மிகப்பெரிய சவாலான விஷயம்தான். ஏனெனில் எந்த நேரமும் ஜியோ சிம்மை அவர்கள் பயன்படுத்தாமல் போகலாம். 


 Trending Articles

Sponsored