’வைலட் பூ’... ஃபேஸ்புக்கின் புது வரவு!ஃபேஸ்புக்கில் அன்பு, கோபம், வருத்தம் இதனுடன் இனி, நன்றியையும் வெளிப்படுத்தலாம். "Grateful" என்னும் வைலட் நிற லைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக்.  


 

Sponsored


ஃபேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது சிறம்பம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. 2015ஆம் ஆண்டு வரை  லைக் செய்யும் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அன்பு, ஹாஹா, வாவ், சோகம், கோபம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆறு ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
 
அண்மையில், பதிவுகளின் கீழ் போடப்படும் கமென்ட்டுகளுக்கும் இந்த ஆறு உணர்வுகளின் குறியீட்டு 'லைக்'குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நன்றி தெரிவிக்கும் வைலட் பூ ஈமோஜியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக். ’எல்லா ஆப்ஷனும் வருகிறது. ஆனால், பதிவுகளுக்கு அன்லைக் செய்யும் ஆப்ஷன் மட்டும் இன்னும் வரவில்லை’ என்று கடிந்துகொள்கின்றனர் நெட்டிசன்ஸ். 

Sponsored


ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக  தற்காலிமாக ஒரு ஈமோஜியை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த வைலட் பூவும்  மே 14 ஆம் தேதி வரவுள்ள  அன்னையர் தினத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored