ரூ.6,999 விலை, அசத்தும் 4100mAh பேட்டரி...ஜியோமியின் அடுத்த அதிரடி! #Redmi4



ந்திய மொபைல் போன் மார்க்கெட்டில், பட்ஜெட் மொபைல்கள்மூலம் தொடர்ந்து ஹிட் அடித்துவரும் நிறுவனம், ஜியோமி. குறிப்பாக ஆன்லைன் விற்பனையில் தொடர்ந்து முத்திரை பதித்துவருகிறது. மொபைல் நிறுவனங்களில் விவோ, ஒப்போ போன்ற நிறுவனங்கள் ஒருபக்கம் கேமரா எக்ஸ்பர்ட் மொபைல்களாக சந்தையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் பட்ஜெட் மொபைல்கள்மூலம் ஆதிக்கம் செலுத்திவருகிறது, ஜியோமி நிறுவனம். 

Sponsored


ஏற்கெனவே ரெட்மி சீரிஸ், எம்.ஐ., நோட் சீரிஸ் என ஜியோமி அறிமுகம்செய்த அனைத்துமே மார்க்கெட்டில் சூப்பர் ஹிட். சில நாள்களுக்கு முன்னர்தான், ரெட்மி 4A என்ற போனைக் கொண்டுவந்தது. தற்போது அந்த வரிசையில், புதிதாக ரெட்மி 4  என்ற போனை அறிமுகம்செய்துள்ளது அந்த நிறுவனம். சீனாவில் ஏற்கெனவே ரெட்மி 4X என அறிமுகப்படுத்தப்பட்ட மாடலைதான், தற்போது ரெட்மி 4 என இந்தியாவில் அறிமுகம்செய்துள்ளது. இதற்கு முன்பு, ரெட்மி சீரிஸில் வந்து சக்கைப்போடு போட்ட ரெட்மி 3S-ன் தொடர்ச்சியாகத்தான் வெளிவந்துள்ளது, இந்த ரெட்மி 4. 

Sponsored


Sponsored


5 இன்ச் டிஸ்ப்ளே, Snapdragon 435 ஆக்டாகோர் பிராஸசர், 2 / 3 / 4 ஜி.பி ரேம், டூயல் சிம் மற்றும் மெமரி கார்டு பயன்படுத்துவதற்கான ஹைப்ரிட் ஸ்லாட், ஃபிங்கர் பிரின்ட் சென்சார், MIUI 8 எனக் கொடுக்கும் பணத்துக்கு அத்தனை விதங்களிலும் சரியான போனாக இருக்கிறது ரெட்மி 4. முந்தைய ரெட்மி சீரிஸில் இருந்த மற்ற அம்சங்கள் இதிலும் தொடர்கின்றன. இதற்கு முந்தைய மாடலில் இருந்த ஹைப்ரிட் ஸ்லாட், 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா ஆகியவை அப்படியே இதிலும் இருக்கின்றன. பட்ஜெட்டுக்கு அடுத்து, இதன் இன்னொரு ஹைலைட் இதன் பேட்டரிதான். 4100 mAh திறன்கொண்ட பேட்டரி இதில் இருப்பதால், பெஸ்ட் பேட்டரிகொண்ட மொபைல்களின் பட்டியலிலும் இடம்பிடிக்கிறது, இந்த ரெட்மி 4.

 பில்ட் குவாலிட்டி, போனின் டிசைன், சரியான விலை ஆகியவை ரெட்மி 4-ன் சிறப்பம்சங்கள். ஆனால், மெமரியை நீட்டித்துக்கொள்வதற்காக ஒரு சிம்-ஐ இழக்கவைக்கும் ஹைப்ரிட் ஸ்லாட் இடம் பெற்றிருப்பது மைனஸ். ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோதான் இதில் இருக்கிறது. அடுத்த வெர்ஷனான நௌகட்டிற்கு, அப்டேட் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது, ஜியோமி. போட்டியாளர்களோடு ஒப்பிடுகையில்... பெர்பார்மன்ஸ், கேமரா, டிசைன், விலை என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறது ரெட்மி 4. கோல்டு மற்றும் கறுப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. ரேம் மற்றும் மெமரியைப் பொறுத்து மூன்று மாடல்கள் இருக்கின்றன. இதற்கான விற்பனை, வரும் 23-ம் தேதி மதியம் 12 மணி முதல் துவங்குகிறது.

விலை :

மொத்தம் மூன்று வேரியன்ட்களில் ரெட்மி 4-ஐ அறிமுகம்செய்துள்ளது ஜியோமி. அவற்றின் விலை முறையே, 

2 ஜி.பி ரேம் / 16 ஜி.பி மெமரி மாடல்: ரூ. 6,999

3 ஜி.பி ரேம் / 32 ஜி.பி மெமரி மாடல்: ரூ. 8,999

4 ஜி.பி ரேம் / 64 ஜி.பி மெமரி மாடல்: ரூ.10,999 ஆகும்.



Trending Articles

Sponsored