பழைய நோக்கியா போனை காப்பியடிக்கும் செல்போன் நிறுவனங்கள்!Sponsoredநோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகள் தங்கள் போன்களை அறிமுகம் செய்துள்ளனர்.

நோக்கியாவின் மிகப்பிரபலமான போன் மாடல் 3310. இன்றைய ஆண்ட்ராயிட் காலத்துக்கு முன்னர் நோக்கியாதான் கைப்பேசி உலகின் ராஜா. நோக்கியா 3310 போனைப் பயன்படுத்தாதவர் மிகக்குறைவே. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட நோக்கியா 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது. அதே வடிவம், அதே ஸ்னேக் கேம், இன்னும் கொஞ்சம் கூடுதல் அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது நோக்கியா.

Sponsored


இதனிடையே நோக்கியாவின் 3310 மாடலை அப்படியே காப்பியடித்து மைக்ரோமேக்ஸ், டராகோ உள்ளிட்ட கைப்பேசித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன. 3310 வடிவத்தில் இருக்கும் டராகோ 3310 வெறும் 799 ரூபாய்க்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் இந்த போன் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் 3310 வடிவில் X1i என்ற போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 1399 ரூபாய். 
 

Sponsored
Trending Articles

Sponsored