சென்னை மெட்ரோ ஆப்... பயணிகளுக்கு பயன் தருகிறதா? #ChennaiMetroSponsoredசென்ட்ரல் ஸ்டேஷன், மெரினா பீச், செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்றவற்றோடு சென்னையின் புதிய அடையாளமாக இணைந்துள்ளது சென்னை மெட்ரோ ரயில். அரசு மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்ததில் இருந்தே, மக்கள் மத்தியிலும் மெட்ரோ ரயில் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் புதிய ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம். பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா இந்த ஆப்?

என்ன இருக்கிறது இந்த App-ல்?

Sponsored


பயணிகளுக்கான தகவல்களை முழுமையாக தரும் ஓர் ஆப் ஆக இருக்கிறது இந்த சென்னை மெட்ரோ ரயில் ஆப். ஆப்-ஐ திறந்ததுமே ஸ்டேஷன் பற்றிய தகவல்கள், பயணக் கட்டண விவரங்கள், அருகில் இருக்கும் ஸ்டேஷன் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஆகிய நான்கு ஆப்ஷன்களும் இருக்கின்றன. இவை தவிர மேலும் நான்கு Menu-க்களை ஹோம் பேஜில் வைப்பதற்கான வசதியையும் தருகிறது இந்த ஆப். இதன் மூலம் ஆப்-ன் ஹோம் பேஜை உங்களுக்குப் பயனுள்ள வகையில் மாற்றிக்கொள்ளலாம். இத்துடன் சென்னையின் Weather கண்டிஷன் டேட்டாவையும் காட்டுகிறது இந்த ஆப். 

Sponsored


இதுமட்டுமின்றி கூடுதலாக பயண விவரங்கள், டிராவல் கார்டு ரீசார்ஜ் பற்றிய தகவல்களுக்கான லிங்க், சுற்றுலா பயணிகளுக்கான கூடுதல் தகவல்கள் போன்ற வசதிகளும் இதில் இருக்கின்றன. இவற்றுள் பல விஷயங்களை இணையம் இல்லாமலே நீங்கள் பயன்படுத்த முடியும். இத்துடன் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும் அத்தனை ஸ்டேஷன் விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு ஸ்டேஷன் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. எந்த ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி இருக்கிறது, ஸ்டேஷனின் வெளியேறும் வழி தொடர்பான விவரங்கள், ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கும் உணவகங்கள், காபிஷாப் விவரங்கள், கெஸ்ட் ஹவுஸ் என ஒவ்வொரு ஸ்டேஷன்கள் பற்றியும் A-Z விவரங்கள் கிடைக்கின்றன. உணவகங்களின் விவரங்களைக் காட்டுவதற்கும், உங்களுக்கு அருகில் இருக்கும் ஸ்டேஷன் விவரங்களைக் காட்டுவதற்கும் கூகுளின் தகவல்கள் பயன்படுத்தப்படுகிறது.

டூர் கைடு மெனுவில் சென்னையில் இருக்கும் சுற்றுலா தளங்களின் விவரங்கள், கலாசார மையங்கள், உள்ளூர் வானிலை விவரங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இவை பயனுள்ளதாக இருந்தாலும் மிகவும் குறைவான தகவல்களே இதில் இடம் பெற்றுள்ளன. 

ப்ளஸ் மைனஸ் என்னென்ன?

ஆப் டிசைன், மெனு ஆப்ஷன்கள் போன்றவை அனைத்துமே பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதிகமான மெனு ஆப்ஷன்களை  குறைத்து, ஆப் UI-ஐ வடிவமைத்திருந்தால் இன்னும் எளிமையாக இருந்திருக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது தகவல்கள் இருக்கின்றன. தமிழையும் இதில் இணைக்கலாம். கட்டண விவரங்களைப் பொறுத்தவரை சாதாரண கட்டண விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால் ஆபர்களின் விவரங்கள் காட்டப்படுவதில்லை. ஆப்பின் அளவு கூகுள் ப்ளே ஸ்டோரில் 30 எம்.பி.,க்கும் மேலாக இருக்கிறது. இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் போது ஆப்பின் அளவு 70 எம்.பி.,யைத் தாண்டி விடுகிறது. குறைந்த அளவே தகவல்கள் கொண்ட இந்த ஆப்பின் அளவு, இவ்வளவு பெரிதாக இருப்பது மைனஸ்.

மேலும் ஆப் குளோஸ் செய்யும் போது, மெனு ஆப்ஷன்களை க்ளிக் செய்யும் போதெல்லாம் சின்ன சின்ன 'Bugs' தென்படுகின்றன. மெட்ரோவின் சுரங்க ரயில் நிலையங்களில் மொபைல் டவரே கிடைப்பதில்லை. எனவே இதனை மனதில் கொண்டு ஆன்லைன் வசதிகளை விடவும், ஆஃப்லைன் வசதிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரி செய்தால், அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தும் ஆப் ஆக இது இருக்கும். அதே சமயம் புதிதாக மெட்ரோவில் பயணிப்பவர்களுக்கும், மெட்ரோவில் பயணிக்க திட்டமிடுபவர்களுக்கும் ஒரு ஆண்ட்ராய்டு கைடாக இருக்கிறது இந்த சென்னை மெட்ரோ ரயில் ஆப். 

டவுன்லோட் செய்ய : Chennai Metro Rail LimitedTrending Articles

Sponsored