ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்டி வைரஸ் ஆப்ஸ் தேவையா? #AntiVirusகம்ப்யூட்டருக்குத்தான ஆன்டி வைரஸ் தேவைப்படும்... ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையிருக்காது என்று பலர் நினைப்பதுண்டு. அது உண்மையா? உங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு என்றால் ஆன்டி வைரஸ் இருப்பது நல்லதுதான் என்கிறார்கள் டெக்கீஸ். தனிநபர் தகவல்கள் திருடப்படுவது என்பது இன்றைக்குக் கணினிகளை விட மொபைல்களில் அதிகமாக இருக்கிறது. எப்பொழுதும் இணைப்பில் இருக்கும் இணையம், ஓப்பன் சோர்ஸ், மால்வேர்கள் ஆகியவை தகவல்கள் திருடப்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. ப்ளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்கள் ஓரளவுக்கு நம்பத்தகுந்தவை. ஏனெனில், எதாவது மால்வேர் கொண்ட ஆப் இருந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அது பற்றி ரிப்போர்ட் செய்துவிடுவார்கள். 

Sponsored


ஆன்டி வைரஸ் என்பது வைரஸ் நீக்குவதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது பலரின் கருத்து. ஆனால் ஆன்டி வைரஸ் நமக்கு அதையும் தாண்டி பல வசதிகளை அளிக்கிறது. ஆப் லாக், கால் பிளாக்கிங், இன்டர்ட் பாதுகாப்பு என இதில் வசதிகள் அதிகம். சிறந்த ஆன்டி வைரஸ் என்பது வைரஸ் பாதிக்கப்பட்ட பைல்களை நீக்க மட்டும் செய்யாது. மாறாக ஸ்மார்ட்போனை எல்லா விதத்திலும் முழுவதுமாக பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. அவ்வாறு உதவும் சில சிறந்த மொபைல் ஆன்டி வைரஸ் மென்பொருள்களின் தொகுப்பு.

Sponsored


McAfee Mobile Security
விண்டோஸ்இயங்குதளங்களில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. மொபைல் திருடப்பட்டால் திருடியவனின் முகத்தை புகைப்படம் எடுப்பதோடு மட்டுமின்றி இருக்கும் இடத்தையும் சேர்த்து, பதிவு செய்யப்பட்ட இமெயிலுக்கு அனுப்பி வைக்கும், மேலும் திருடப்பட்ட மொபைலில் உள்ள தகவல்களையும் இதன் மூலமாக எளிதில் அழித்து விடலாம். பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கும் மேலும் அது தொடர்பான செய்திகளையும் நமக்குக் காண்பிக்கும். ஆண்ட்ராய்டு வேர் (Wear) டிவைஸ்களிலும் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

Sponsored


ஆப் ரேட்டிங்:4.4
டவுன்லோட் லின்க்

Avast
அவாஸ்ட் ஆன்டி வைரஸ் ஏற்கெனவே மிகப்பிரபலமான ஒன்று. பயன்படுத்த எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. வைரஸ்களை தவிர்ப்பதற்காக அடிக்கடி அப்டேட் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆப் லாக், வைரஸ் ஸ்கேனிங், கால் பிளாக்கிங் என வசதிகள் இருக்கும். 230 மில்லியனுக்கும் அதிகமான முறை பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. 

ஆப் ரேட்டிங்:4.5
டவுன்லோட் லின்க்

Kaspersky
ஆண்ட்ராய்டுக்கான மிகச்சிறந்த ஆன்டி வைரஸ்களில் ஒன்றாக கருதப்படும் இது இன்ஸ்டால் செய்யப்படும் ஆப்களை தானாகவே ஸ்கேன் செய்கிறது. அது ப்ளேஸ்டோரிலிருந்து பெறப்பட்டாலும் கூட அதை ஆராய்கிறது. யாராவது தவறாக ஸ்மார்ட்போனை அன்லாக் முயன்றால் முன்புற கேமரா மூலம் படம் எடுத்துவிடும் இதனால் அன்லாக் செய்ய முயன்ற நபரை எளிதில் கண்டறியலாம். 

ஆப் ரேட்டிங்:4.7
டவுன்லோட் லின்க்

AVG
மற்ற ஆன்டி வைரஸ் மென்பொருள்களைப் போன்று மொபைல் செயல்பாட்டையோ அல்லது பேட்டரியையோ பாதிக்காமல் செயல்படுவது இதன் சிறப்பம்சம்.இது இன்ஸ்டால் செய்யப்பட்ட மொபைல் தொலைந்தால் கூகுள் மேப் மூலமாக இருக்கும் இடத்தை அறிய முடியும்.அளவில் மிகக் குறைவாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் மொபைல் மெமரி குறைந்தளவே தேவைப்படும்.

ஆப் ரேட்டிங்:4.5
டவுன்லோட் லின்க்

Eset Mobile Security
இன்ஸ்டால் செய்யப்படும் ஆப்கள் மட்டுமில்லாமல் டவுன்லோட் செய்யப்படும் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பெரும்பாலான வசதிகளை இலவசமாகவே பயன்படுத்தலாம். தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்களைத் தடுக்கும் வசதி இருக்கிறது. மேலும் டேப்லட்களிலும் எளிதாகப் பயன்படுத்தலாம்.

ஆப் ரேட்டிங் : 4.7
டவுன்லோட் லின்க்

ஆன்டி வைரஸ்களால் சில எதிர்மறை பிரச்னைகளும் உண்டு. அதில் முக்கியமானது பேட்டரி. அனைத்து ஆன்டி வைரஸ்களுமே சார்ஜை விரைவில் தீர்த்துவிடும். ஏனெனில், அவற்றின் வேலையை முழுமையாக செய்ய அவ்வளவு சக்தி தேவைப்படும். அதனால், ஆன்டிவைரஸ் பயன்படுத்துபவர்கள், மொபைலில் சார்ஜ் குறைவாக இருக்கும்போது அவற்றை disable செய்து வைக்கலாம்.

-மு.ராஜேஷ்

மாணவ பத்திரிகையாளர்Trending Articles

Sponsored