“சிஸ்டமே சரியில்லை” எனப் புலம்புகிறவர்கள் கவனத்துக்கு..!Sponsored

ஒரு பைக் வாங்கினால் கூட இரண்டு ஆண்டுகள் வரை அது புதிய மாடல் என்ற எண்ணம் நமக்கிருக்கும். ஆனால், கணினியோ, லேப்டாப்போ வாங்கினால் ஒரே மாதத்தில் ஃபீல் செய்ய தொடங்கிவிடுவோம். “இவ்ளோ ஸ்லோவா இருக்கே”, “அயர்ன் பாக்ஸாட்டம் கொதிக்குது” என வரிசையாக பிரச்னைகள் எழும். உங்கள் சிஸ்டம் சரியில்லை என்றால், சர்வீஸ் சென்டருக்கு ஓட வேண்டாம். சில எளிமையான விஷயங்களை நாமே முயற்சி செய்து பார்க்கலாம்.

1) பேக்கிரவுண்ட் புரோகிராம்ஸ்:

Sponsored


நமக்கே தெரியாமல் பல புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலும், கணினி மெதுவாக இயங்க இவைதான் காரணமாக இருக்கும். கணினி ஆன் செய்தவுடனே, பல புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். இவற்றை செட்டிங்க்ஸில் சென்று, தேவையில்லாததை வேண்டிய சமயங்களில் மட்டும் இயங்கும்படி மாற்றிக்கொள்ளலாம். எந்த புரோகிராம்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறன என்பதை Task managerல் பார்க்கலாம். 
சில சமயம் ஆன்டி வைரஸ் கணினியின் செயல்பாட்டை மெதுவாக மாற்றும். தினமும் ஆன்டி வைரஸ் குறிப்பிட்ட நேரத்தில் முழுக் கணினியையும் ஸ்கேன் செய்யும். அந்த நேரத்தில் கணினியை இயக்கினால் திக்கித் திணறும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

Sponsored


2) Temp files:

நாம் பார்க்கும் இணையதளங்களில் சிறியதும், பெரியதுமாக எத்தனை புகைப்படங்கள் இருக்கின்றன? கணினியின் பிரவுசர் அவற்றை நமக்குக் காட்டுகிறது என்றால் அவற்றை தனக்குள் சேமித்துதானே காட்ட முடியும்? அப்படிப்பட்ட ஃபைல்கள் பொதுவாக Temp files ஃபோல்டரில்தான் சேவ் ஆகும். அவற்றை அவ்வப்போது க்ளீன் செய்யாவிட்டால் பல ஜிபிக்கு சேர்ந்துவிடும். அதுவே கணினியின் வேகத்தை மட்டுப்படுத்தும். குறிப்பிட்ட நாளுக்கு ஒரு தடவை temp files க்ளியர் செய்துவிடுங்கள்.

3) ஹார்டு டிஸ்க்:

பொதுவாக கணினியின் ஹார்டு டிஸ்க்கில் பார்ட்டிஷன் போட்டுத்தான் வைப்போம். C drive, D drive எனப் பல டிரைவ்கள் இருந்தாலும் அனைத்து ஃபைல்களையும் C டிரைவிலே சேமித்து வைப்போம். உதாரணத்துக்கு, C டிரைவின் கொள்ளளவு 100 ஜிபி என்றால், அதில் 80 ஜிபிக்கு டேட்டா இருக்கும். ஆனால், இன்னொரு 100ஜிபி கொண்ட D டிரைவில் 10 ஜிபிக்கு கூட டேட்டா இருக்காது. முடிந்தவரை C டிரைவில் சேவ் செய்யாமல் மற்ற டிரைவை பயன்படுத்தலாம். எப்போதாவது ஆப்ரேட்டிங் சிஸ்டம் ரீ-இன்ஸ்டால் செய்ய நேர்ந்தால், அப்போது மத்த டிரைவிலிருக்கும் டேட்டாவை அழிக்காமல் காப்பாற்றலாம்.

4) டீஃப்ராக்மெண்டேஷன் (Defragmentation)

இது ஒரு சிம்பிள் ஆன புராசஸ்தான். நாம் சேமிக்கும் டேட்டாவை வரிசையாக அடுக்கிக்கொண்டே வரும் சிஸ்டம். நடுவில் சில டேட்டாவை மட்டும் அழித்தால், அந்த இடம் மட்டும் காலி ஆகும். ஆனால், புது டேட்டாக்களை வரிசையாகத்தான் சிஸ்டம் அடுக்கும். நடுநடுவில் காலியாக இருக்கும் இடங்களை ஆக்ரமிக்காது. அதனால், அந்த இடம் காலியாக இருந்தாலும், டேட்டா இருப்பதுபோலதான் கணக்காகும். Defragmentation அந்தக் காலி இடங்களை அழித்து, இருக்கும் டேட்டாவை நெருக்கமாக அடுக்கும். இதனால் சிஸ்டத்தின் வேகம் கூடும்.

இவைத் தவிர முறையாக விண்டோஸ் அப்டேட் செய்வது, சிஸ்டம் சூடாகாமல் பார்த்துக்கொள்வது, நல்ல ஆன்டி வைரஸ் பயன்படுத்தி மால்வேர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது என நல்ல சிஸ்டத்துக்குத் தேவையான விஷயங்கள் பல.Trending Articles

Sponsored