விற்பனைக்கு வந்தது Xiaomi ரெட்மி 4!சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi, அதன் ரெட்மி 4 ஸ்மார்ட் போன்களை இன்றிலிருந்து இந்திய சந்தைகளில் விற்பனை செய்கிறது. அமேசான் மற்றும் Mi இணையதளங்களில் மட்டுமே இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆஃப் லைனில் இந்த போன்கள் கிடைக்காது. இந்த போனின் பேசிக் மாடல், 6,999 ரூபாய்க்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10,999 ரூபாய் வரை இந்த போன் மார்க்கெட்டில் கிடைக்கிறது. 

Sponsored


கறுப்பு மற்றும் கோல்டன் மஞ்சள் வண்ணங்களில் இந்த போன் கிடைக்கப் பெறுகிறது. இந்த மாத தொடக்கத்தில் இந்த போன்கள் Xiaomi நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 

Sponsored


6,999 ரூபாய் மதிப்புள்ள போனில் 2 ஜி.பி ரேமும் 16 ஜி.பி சேமிப்பு வசதியும் உள்ளது. 10,999 ரூபாய் மதிப்புள்ள போனில் 4 ஜி.பி ரேமும் 64 ஜி.பி சேமிப்பு வசதியும் உள்ளது. 10,999 ரூபாய்க்கு வரும் டாப் எண்டு மாடல், ஜூன் மாதம் இறுதி வரை கிடைக்காது என்று Xiaomi நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 
 

Sponsored
Trending Articles

Sponsored