புது ஐ-பேட், சிரி ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஐ.ஓ.எஸ் 11...! ஆப்பிளிடம் என்ன எதிர்பார்க்கலாம்? #WWDC17



ண்ட்ராய்டு பயனாளர்களின் திருவிழாவான கூகுள் I/O கடந்த மாதம் நடந்துமுடிந்த நிலையில், ஐ.ஓ.எஸ்.பயனர்களுக்கான திருவிழா இன்று தொடங்குகிறது. ஆப்பிள் வருடந்தோறும் நடத்தும் WorldWide Developers Conference (WWDC) நிகழ்ச்சி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. மென்பொருள் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமே இந்த நிகழ்வில் அதிகம் வெளிவரும் என்றாலும், இந்த ஆண்டு ஹார்ட்வேர் விஷயத்திலும் ஆப்பிள் சில சர்ப்ரைஸ்கள் தரும் என்கின்றனர் டெக்கீஸ். எனவே ஆப்பிள் தனது புதிய கேட்ஜெட்களையும் இதில் அறிமுகம் செய்யலாம். வழக்கம்போலவே இந்த நிகழ்விலும் ஆப்பிள் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும் உருவாகத் துவங்கிவிட்டது. அப்படி ஆப்பிளிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் இவைதாம்!

Sponsored


ஆப்பிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ்?

Sponsored


அமேசான் நிறுவனத்தின் எகோ, கூகுள் ஹோம் போலவே ஆப்பிளும் சிரியுடன் இணைந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யலாம். ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருவதால், ஆப்பிள் ஸ்மார்ட்ஸ்பீக்கர்களை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே இந்த நிகழ்வில் ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, அதன் சோதனை ஓட்டத்தையும் காட்டலாம். அப்படி இந்த நிகழ்வில் ஆப்பிள் ஸ்மார்ட்ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தால், அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. கூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் இருந்து முற்றிலும் வேறுபடும் வகையில் இருப்பதற்காக விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜியை ஆப்பிள் இதில் பயன்படுத்தும் எனத் தெரிகிறது. இப்படி ஆப்பிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகப்படுத்தப்பட்டால் ஆப்பிள் வாட்ச், ஐபேட், ஐபோன், மேக் என அனைத்துடனும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இருக்கும். 

Sponsored


புதிய சாஃப்ட்வேர்:

ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் என அனைத்திற்குமே புதிய சாப்ட்வேர் அப்டேட்டை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோனுக்கான ஐ.ஓ.எஸ் 11-ல், அப்டேட்டான இன்டர்பேஸ், புதிய வடிவத்தில் ஆப்பிள் மியூசிக் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். WWDC முழுவதுமே மென்பொருளை மையப்படுத்திய நிகழ்வு என்பதால் ஐ.ஓ.எஸ், மேக் ஓ.எஸ், ஆப்பிள் வாட்ச் ஓ.எஸ் போன்றவற்றில் புதிய மாற்றங்களை அதிகம் காணலாம்.

புதிய மேக்புக் மாடல்கள்:

மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் இரண்டிலும் புதிய பிராஸசர்களுடன், புதிய மேக்புக்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. 

புதிய ஐபேட்:

ஏற்கெனவே மூன்று அளவுகளில் ஐபேட்களை வெளியிட்டு வருகிறது ஆப்பிள். தற்போது நான்காவதாக 10.5 இன்ச் அளவில் புதிய ஐபேட் ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. சாதாரண ஐ-பேட் அளவில்தான் (9.7 இன்ச்) இதுவும் இருக்கும். ஆனால் இதில்  ஸ்மார்ட்போன்களில் இருக்கும் எட்ஜ்லஸ் டிஸ்ப்ளே போலவே, விளிம்புகளின் அளவைக் குறைத்து டிஸ்ப்ளேவின் அளவை ஆப்பிள் பெரிதாக்கவிருக்கிறது.

இதுதவிர ஐபேட்களில் ஸ்டைலஸ்-க்கு ஏற்ப ஆப்ஸ்களை அப்டேட் செய்வது, ஐ.ஓ.எஸ்.,ஸில் முழு டார்க் மோடை அறிமுகப்படுத்துவது, மெசேஜிங் மற்றும் பேமன்ட் சிஸ்டங்களுக்கான அப்டேட்ஸ், ஆப்பிள் டிவிக்கான ஓ.எஸ் மாற்றங்கள் போன்றவை குறித்த அறிவிப்புகளும் வெளியாகவிருக்கின்றன. ஹார்ட்வேரைப் பொறுத்தவரை  ஐபோனைத் தவிர்த்து மற்ற அனைத்திலுமே புதிய அறிவிப்புகள் வெளியாகலாம்!



Trending Articles

Sponsored