3...5...6... இந்தியாவைக் கலக்க வருகிறது நோக்கியா! #Nokia



Sponsored



ஸ்மார்ட் போன் பிரியர்களே லைக்ஸ் போட காத்திருந்த போன் நோக்கியா 3310. அந்த போனை கடந்த மாதம் இந்தியாவில் வெளியிட்டுவிட்டது ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம். இந்நிலையில் வரும் 13-ம் தேதி நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய மூன்று போன்களை இந்தியாவில் களமிறக்கவிருக்கிறது அந்நிறுவனம். இந்த போன்கள்தான் என ஹெச்.எம்.டி நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் மே - ஜூன் மாதங்களில் தனது போன்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரவிருப்பதாக கடந்த மாதமே தெரிவித்திருந்தது நோக்கியா. எனவே இந்த மூன்று மொபைல்களையும் வெளியிடுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த போன்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன எனப் பார்ப்போமா?

நோக்கியா 2.0:

முன்னொரு காலத்தில் போன் விற்பனையில் சாதனை படைத்துவந்த நோக்கியா தற்போது தனது  போன்களை சொந்தமாக உற்பத்தி செய்வதில்லை. மாறாக ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம்தான் நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வருகிறது. சீனாவில் ஏற்கெனவே நோக்கியா மொபைல்கள் அறிமுகமாகிவிட்ட நிலையில் தற்போது இந்தியாவில் இவற்றை சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அந்நிறுவனம். ஏற்கெனவே நோக்கியா 3310 மாடல் போனை, 3310 ரூபாய் விலைக்கு இந்தியாவிள் அறிமுகம் செய்தது. தற்போது இந்த வரிசையில் புதிதாக மூன்று மொபைல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.  

Sponsored


நோக்கியா 3:

Sponsored


இந்த மூன்று மாடல்களில் குறைவான விலை கொண்ட மாடல் இதுதான். பாலிகார்பனேட் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் உடன் கூடிய டிசைன், 5 இன்ச் டிஸ்ப்ளே, சிங்கிள் சிம் மற்றும் டூயல் சிம் ஆப்ஷன்கள், 8 எம்.பி கேமராக்கள், ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி இன்டர்னல் மெமரி, 2630 mAh  பேட்டரி என பட்ஜெட் மொபைல்களுக்கான தகுதிகளோடு வரவிருக்கிறது நோக்கியா 3. இதே வசதிகளுடன் மார்க்கெட்டில் இருக்கும் மொபைல்களோடு ஒப்பிடுகையில் 7000 முதல் 9000 ரூபாய்க்குள் இதன் விலை இருக்கலாம்.

நோக்கியா 5:

முழு மெட்டல் பாடியுடன் காம்பேக்ட் ஸ்மார்ட்போனாக இருக்கிறது நோக்கியா 5. Qualcomm® Snapdragon™ 430 பிராஸசர், ஆண்ட்ராய்டு 7.1.1 ஓ.எஸ், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி இன்டர்னல் மெமரி, 5.2 இன்ச் டிஸ்ப்ளே, ஃபிங்கர்பிரின்ட் சென்சார், 3000 mAh பேட்டரி, 13 எம்.பி ப்ரைமரி கேமரா, 8 எம்.பி ஃபிறந்த கேமரா என்பதுதான் இந்த போனின் புரொஃபைல். மற்ற இடங்களில் இதன் மார்க்கெட் விலையைப் பார்க்கும் போது 12,000 ரூபாய்க்கு இந்த போன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 6:

இந்த மூன்று மாடல்களிலேயே ஹை எண்ட் மாடல் நோக்கியா 6-தான். முழு மெட்டல் பாடியுடன் நேர்த்தியான டிசைனைக் கொண்டுள்ளது நோக்கியா 6. மற்ற இரு மாடல்களில் இல்லாத 3 ஜி.பி ரேம் இதில் இருக்கிறது. பிளாக் கலர் நோக்கியா 6 மட்டும் 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி இன்டர்னல் மெமரியைக் கொண்டிருக்கும். மற்ற மாடல்கள் அனைத்தும் 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி மெமரியைக் கொண்டிருக்கும். சுமார் 15,000 ரூபாய் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மொபைலில் இருப்பதும், Qualcomm® Snapdragon™ 430 பிராஸசர்தான் என்பது இதன் மைனஸ். 16 எம்.பி திறன்கொண்ட ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி ஃபிரன்ட் கேமரா ஆகியவை இருக்கின்றன. 3000 mAh பேட்டரி, டூயல் ஸ்பீக்கர்ஸ், ஃபிங்கர்பிரின்ட் சென்சார், 5.5 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவை இதன் மற்ற வசதிகள். சீனாவில் அசுரஹிட் அடித்த மாடல் என்பதால், இந்தியாவிலும் ஹிட் அடிக்க வாய்ப்புகள் அதிகம். 

நோக்கியா ரசிகர்களே... ஜூன் 13-ம் தேதியை குறிச்சு வச்சுக்கோங்க!



Trending Articles

Sponsored