மின்சாரத்தை கடத்தும் மேஜிக் பெயிண்ட்... பேப்பரில் வரைந்தால் சர்க்யூட் ரெடி!Sponsoredமின்சாரம், மின் இணைப்புகள் என்ற வார்த்தைகளையெல்லாம் கேட்டவுடன் உங்கள் மூளை காண்பிக்கும் படம் என்ன? மின்கம்பிகள் தானே! மழை பெய்து முடித்த பிறகும் கூட வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு தடை விதிப்பதற்கு பெரிய காரணமாக இருக்கக்கூடியது, இந்த மின்கம்பிகள் தான். ‘எங்கே எந்த கம்பி அறுந்திருக்கும்னு தெரியாது, தண்ணி வேற தேங்கி இருக்கும். பார்த்துப் போ’ என்ற அம்மாக்களின் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துள்ளது மின்கம்பிகளே இல்லாத மின்சாரம் கடத்தும் இந்த பெயிண்ட்.

’என்னது பெயிண்ட்டா..’ என்கிறீர்களா? ஆம், பெயிண்ட்டேதான்! குழந்தைகள் உபயோகப்படுத்தும் சாதாரண வாட்டர் கலர் பெயிண்ட் போன்றதுதான் இந்த வகை பெயிண்ட்டும். தண்ணீரில் கலந்து பேப்பரில் வரைந்து, அது காயும்வரை காத்திருக்க வேண்டும். காய்ந்தவுடன், மின்கடத்தியாக செயல்பட துவங்கிவிடுகிறது.. ஏதாவது படம் வரைந்து, அதன் ஒரு முனையில் எல்.இ.டி. லைட்டும், மறுமுனையில் பேட்டரியும் பொறுத்தினால், மின்இணைப்பு கிடைத்து எல்.இ.டி. எரிய துவங்குகிறது. இதனை குழந்தைகள் விளையாட அட்டைகளில் செய்து தரலாம், பிறந்தநாள் அட்டைகளில் ஒட்டிவைக்கலாம். கிஃப்ட் பேப்பரில் செய்யலாம். கேம்-கண்ட்ரோலராக செயல்படவைக்கலாம். முக்கியமாக…. சுவர்களில் ஸ்விட்ச் வடிவில் வரைந்து, அதோடு தேவையான லைட்டை, டச் சென்சார் மற்றும் டச்-போர்ட் கொண்டு சேர்த்தால், நாம் ஸ்விட்சை தொடும் போது டச் சென்சார் செயல்படத்துவங்கி, மின் இணைப்பு கொடுக்கிறது. இதன் மற்றொரு சிறப்பம்சம், தண்ணீர் கையோடு இதை தொடுவதால், ஷாக் அடிக்கும் அபாயம் இல்லை. பெயிண்ட் வகையை சேர்ந்தது இது என்பதால், தண்ணீர் பட்டால், அழிந்துவிடும்!!!

Sponsored


தொடக்கம் இங்கே தான்!

Sponsored


லண்டனின் ‘ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்’டை சேர்ந்த மாணவர்கள் குழுதான் இதை உருவாக்கியவர்கள். மின்சாரம் கடத்தும் இந்த கார்பன் பெயிண்டை துணி, கண்ணாடி, காகிதம் என ஏதாவது ஒன்றின் மீது வரைந்து, அதற்கு மின் இணைப்பு தந்துவிடுகின்றனர். இந்த பெயிண்ட்டை பொருட்களின் மீதுதான் வரைய வேண்டும் என்று இல்லை. மனித உடல் மீது வரைந்து, நம் உடலை ஒரு மின்கடத்தியாக செயல்பட வைக்கவும் இயலும். 2009ம் ஆண்டு, கெல்வின் ஹாரிஸ் என்பவர், மனித உடலை இசைக்கருவிகளாக பயன்படுத்தும் நோக்கில், மனித தோலை பாதிக்காத இங்க் (பேனா மை) ஒன்றை, BARE CONDUCTIVE என்ற நிறுவனத்தின் உதவியோடு, தனது ‘ஹூயமன்திசைசர்’ (HUMANTHESIZER) என்ற இசை ஆல்பத்தில் பயன்படுத்தியுள்ளார். அதில் நடனம் ஆடுபவர்களின் உள்ளங்கையில் பூசப்பட்டிருக்கும் அந்த மை, உடலை ஒரு மின்கடத்தியாக செயல்பட வைத்து, அவர்கள் கைதட்டும்போது குறிப்பிட்ட இசையை எழுப்புகிறது.

இதனைக் கண்ட மக்கள், ‘எனில் இவற்றை பொருட்கள் மீது வரைந்து, அதன் கடத்தல் குணத்தை செயல்பட வைக்க இயலுமா’ என்று கேட்கவே, அந்த கேள்வியை நோக்கி பயணித்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுவே மின் கடத்திகளாக செயல்படக்கூடிய இந்த பெயிண்டின் தொடக்கம். BARE CONDUCTIVE என்ற அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் நெல்சன், இசபெல் லிசார்டி, பெக்கி பில்டிட்ச், மேட் ஜான்சன் என்ற மாணவர்களோடு சேர்ந்து ‘BARE PAINT’ஐ உருவாக்கியுள்ளார். முதலில் பரிசோதிக்கும் பட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, தற்போது கல்விகூடங்களில் மாணவர்களுக்கு போதிக்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கும் உள்ளன இவை. மின்னனு மற்றும் மின்சாரம் குறித்த மக்களின் பார்வையை மாற்றி எழுதுவதே எங்கள் நோக்கம் எனக்கூறி இதை இன்னமும் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நச்சுத்தன்மை விளைவிக்காத மற்றும் மின் கடத்தும் வேலையை மட்டுமே செய்யும் இவ்வகை பெயிண்ட், தற்போது சந்தைகளில் பேனா, பெயிண்ட், டின் என பல்வேறு வடிவங்களில் வலம் வருகிறது!Trending Articles

Sponsored