செய்திகள் பகிரப்படுவதில் ’வாட்ஸ்அப்’-க்கு முதலிடம்!Sponsoredசெய்திகள் அதிக அளவில் பகிரப்படுவதில் மற்ற சமூக வலைதள பக்கங்களை பின்னுக்குத் தள்ளி ‘வாட்ஸ்அப்’ முதலிடம் பிடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் உபயோகப்படுத்தப்படும் ‘வாட்ஸ்அப்’ தனது அடுத்தடுத்த சாதனைகளைத் தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருகிறது. அநேக சமூக வலைதள பக்கங்களைக்காட்டிலும் ‘வாட்ஸ்அப்’பில்தான் செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. ‘வாட்ஸ்அப்’பின் வளர்ச்சி ஃபேஸ்புக் போன்ற பெரிய வலைதளங்களை ஓரங்கட்டியுள்ளது. இதுகுறித்த ஓர் ஆய்வை ‘டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட்’ என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

Sponsored


சர்வதேச அளவில் ஐந்து கண்டங்கள், 30 நாடுகளில் இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் சர்வதேசப் பயனாளர்களை அதிகளவில் ஈர்த்த சமூக வலைதளமாக ‘வாட்ஸ்அப்’ உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக செய்திகள் பெரும்பாலும் ‘வாட்ஸ்அப்’ மூலமாகவே பகிரப்படுவதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Sponsored


இதில், குறிப்பாக ‘வாட்ஸ்அப்’ மூலம் செய்திகளைப் பகிர்வதில் அதிகபட்சமாக மலேசியாவில் 51% மக்களும் குறைந்தபட்சமாக அமெரிக்காவில் 3% பேரும் உள்ளனர் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored