வாய் பிளக்க வைக்கும் கேலக்ஸி நோட் 8-இன் விலை!Sponsoredசாம்சங் நிறுவனம் புதிதாக டெக் உலகில் களமிறக்கும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. பலரும் எதிர்பார்த்துவரும் இந்த போன், ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதன் லான்ச் தள்ளிப்போயுள்ளது. கேலக்ஸி நோட் 8-ன் அதிகாரப்பூர்வமில்லாத விலையும் வெளியாகியுள்ளது.

999 யூரோ, டாலர்களில் 1118, அது இந்திய மதிப்பில் 72,018 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 12 மெகா பிக்ஸல் டூயல் ப்ரைமரி கேமரா, குவால்கம் ஸ்நாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், இத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி அம்சம் கொண்டுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored