இலவச திட்டத்தை நீட்டித்தது ஏர்டெல்! மாதம் 10 ஜிபி இலவசம்!Sponsoredவாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஏர்டெல் தனது 30 ஜிபி இலவச டேட்டாவை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது.

மொபைல் போன் நம் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை விட ஜியோ, மொபைல் போன் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மிகப்பெரியது. இதற்கு போட்டியாக ஏர்டெல், ஃவோடபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிரடி ஆஃபர்களை அள்ளித் தந்தன. அந்த வகையில் ஏர்டெல் முன்னர் அறிவித்த தன்னுடைய ஆஃபர் திட்டத்தை மேலும் மூன்று மாத காலம் நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Sponsored


இந்தப் புதிய அறிவிப்பின் அடிப்படையில், ஏர்டெல் ஏப்ரல் மாதத்திலிருந்து தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக மூன்று மாதங்களுக்கு 30 ஜிபி இலவசம் என்ற சேவையை வழங்கி வந்தது. தற்போது இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு 30 ஜிபி இலவசமாகவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை ஜூலை 1-ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சலுகையை ‘மை ஏர்டெல்’ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored