ஒன்ப்ளஸ் 5 சக்ஸஸ் முதல் ரெட்மி சீக்ரெட்ஸ் வரை... ஜூலை மாத 'டெக்தமிழா' #TechTamizhaSponsoredன்பிற்கினிய 'டெக் தமிழா' வாசகர்களே!

வாரந்தோறும் வெளிவரும் தமிழ் சினிமாக்களை விடவும், ஒரு காலத்தில் வெளிவரும் கேட்ஜெட்களின் எண்ணிக்கை அதிகமாகக்கூடும். அந்தளவிற்கு புதுவரவுகளால் நிரம்பிக்கொண்டிருக்கிறது டெக் உலகம்.  கேட்ஜெட்களோடு இணைந்து நாமும் வேகமாக அப்டேட் ஆகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு கைகொடுக்கும் விதமாகத்தான் கடந்த இரு 'டெக் தமிழா' இதழ்களும் அமைந்தன. 

Sponsored


இதழை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க!

Sponsored


அதைத் தொடர்ந்து இந்த மாதமும் பயனுள்ள செய்திகளுடன் மலர்ந்திருக்கிறது 'டெக் தமிழா'. ஆகாயம் முதல் ஆழ்கடல் வரை ஆதிக்கம் செலுத்தவிருக்கும் ட்ரோன்கள், 

ஆப்பிள், சாம்சங் போன்ற 'டெக் சூப்பர் ஸ்டார்களுக்கே' சவால்விடும் ஒன் ப்ளஸ் 5, 

இந்திய மொபைல் சந்தையின் ஜாதகமே சீன நிறுவனங்கள் கையில் இருக்கும்போது, மீண்டும் கோதாவில் இறங்கியிருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்,

'என்ன இருந்தாலும் சீனா புராடக்ட்தான?' என ஒதுக்கிவிட முடியாத அளவிற்கு குறைந்த விலையில், அதிக வசதிகளை அளிக்கும் ரெட்மியின் பிசினஸ் சீக்ரெட், 

நாம் தற்போது பார்க்கும் HD, MP4, விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற வீடியோக்களின் பின்னால் இருக்கும் இந்தியரின் உழைப்பு என சுவாரஸ்யமான கட்டுரைகளால் நிரம்பியிருக்கிறது ஜூலை மாத இதழ்!

உங்கள் கருத்துகளை கமென்ட்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். #TechTamizha என்ற ஹேஷ்டேக் மூலம் சமூகவலைதளங்களிலும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். 

ஜூலை இதழை டவுன்லோட் செய்ய : https://goo.gl/cbz5wT

நன்றி!
 Trending Articles

Sponsored