நைட் மோட் கேமரா... வாட்ஸ்அப்பில் புது வசதி!Sponsoredஅந்தக் காலத்தில் கேமரா வைத்திருப்பவர்களைப் பார்த்தால், ஊரே அவரை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டுப் போவார்கள். ஊருக்கு ஒருத்தர் என்ற கணக்கில்தான் கேமரா வைத்திருப்பார்கள். மொபைல் போன் வந்த காலத்தில் கேமரா வசதி கொண்ட போன்களை பார்ப்பது அரிதாக இருந்தது. பிறகு, அனைத்து தரப்பினரும் கேமரா போன்கள் வாங்கிய காலம் வந்துவிட்டது. இந்நிலையில், தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாது, போன் வைத்திருக்கும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் போன்களின் அத்தியாவசியத் தேவையாக விளங்கி வருகிறது வாட்ஸ்அப்.

ஆரம்பத்தில் தகவல்களையும் ஆடியோ வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ள வாட்ஸ்அப் பேருதவியாக இருந்தது. அதை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியதால், ஜிஃப் வீடியோ, வீடியோ கால் என அதன் வசதிகளும் அதிகமாகியது. தற்போது உலகம் முழுவதும் 1.2 பில்லியன் வாடிக்கையாளர்கள் இதனை உபயோகிக்கின்றனர். தன் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல வசதிகளை அளித்து வருகிறது வாட்ஸ்அப். சமீபத்தில் எமோஜிகளை அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Sponsored


Sponsored


இந்நிலையில், கேமராவில் புது மாற்றம் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப். வெளிச்சம் இல்லாத நேரங்களிலோ இரவு நேரங்களிலோ கேமராவைப் பயன்படுத்த `நைட் மோட்` ஆப்ஷனை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்அப். இதனைப் பயன்படுத்த லோ லைட் செட்டிங்ஸ் இருக்க வேண்டும். வலது பக்கத்தின் மேலே அரைவட்ட நிலா ஆப்ஷனை க்ளிக் செய்தால் `நைட் மோட்` ரெடியாகிவிடும். இந்த வசதி ஐபோன்களில் மட்டும்தான் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த ஆப்ஷன் மூலம் வெளிச்சம் இல்லாத நேரங்களிலும் இனி போட்டோஸ் செல்ஃபி எடுக்கலாம். விரைவில் இது ஆண்ட்ராய்டுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். ஸ்மைல் ப்ளீஸ்!Trending Articles

Sponsored