இன்றைய கூகுள் டூடுலின் சிறப்பு என்ன தெரியுமா...?Sponsoredஇன்று, கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்தில், உருளைக்கிழங்கிலிருந்து மதுபானம் தயாரித்த இவா எக்பால்டை கௌரவிக்கும் விதமாக, கூகுள் டூடுல் அமைக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் முதன்மையான தேடுதல் தளமாக விளங்குகிறது, கூகுள். இதன் முகப்புப் பக்கத்தில், கூகுள் டூடுல் என்ற சித்திரம் இடம்பெறுவதுண்டு. இது, அன்றைய நாளில் வரலாற்று சிறப்புமிக்க ஒருவரைப் பற்றியோ வேறு ஏதாவது நிகழ்வுகளைப் பற்றியோ வடிவமைக்கப்படும். இதில் அப்துல்கலாம், நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, பல உலக நிகழ்வுகளையும் டூடுலாக வடிவமைத்து அசத்திவருகிறது கூகுள்

Sponsored


இந்நிலையில், இன்றைய கூகுள் டூடுல் உருளைக்கிழங்கிலிருந்து மதுபானம் தயாரித்த இவா எக்பால்டை கௌரவிக்கும் விதமாக  அமைக்கப்பட்டுள்ளது. இவர், 1746-ல் உருளைக்கிழங்கிலிருந்து வைன் மற்றும் வோட்கா தயாரித்தார். இவரின் கண்டுபிடிப்பு, ஸ்வீடன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றியது. இதையடுத்து, 'ராயல் ஸ்வீடிஷ் அகாடமி  ஆஃப் சயின்ஸ்' அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டார். இந்த அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் இவர். இன்று இவரின் 293-வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் கௌரவப்படுத்தியுள்ளது.
.

Sponsored
Trending Articles

Sponsored