500 ரூபாய்க்கு வரவிருக்கும் ரிலையன்ஸ் 4G போன்! லீக்கான புகைப்படங்கள்...



ஜியோ புயலின் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் நிறுவனம் வெறும் 500 ரூபாய்க்கு 4G போன் அறிமுகப்படுத்தப்போகிறது என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, இப்போது அதன் படங்கள் மற்றும் ஸ்பெசிபிகேஷன்ஸ் இணையதளங்களில் கசிந்துள்ளன.

Sponsored


Sponsored


ஜியோவின் ஆஸ்தான நிறுவனமான LYF நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த போனில் 4G வசதி தவிர மேலும் பல ஆச்சர்யமூட்டும் வசதிகளும் உண்டு. 2.4 இன்ச் கலர் டிஸ்பிளேயுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கீ-பேட் கொடுக்கப்பட்டுள்ளது. VoLTE 4G தொழில்நுட்பத்தில் செயல்படும் இது 512MB RAM உடன் 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டுள்ளது. டூயல் சிம் கார்டுகள் (mini SIM + nano SIM) போடப்படும் வசதியுடன் கூடுதலாக MicroSD எக்ஸ்டெர்னல் மெமரி கார்டும் போட்டுக்கொள்ளலாம்.

Sponsored


அதிசயிக்க வைக்கும் வகையில் இந்த போனில் ஜியோ டிவி, ஜியோ சினிமா உட்பட பெரும்பாலான ஜியோ ஆப்ஸ்கள் மற்றும் ஃபேஸ்புக் ஆப் ஆகியவற்றை சரளமாகப் பயன்படுத்த முடியுமாம். KAI OSல் செயல்படும் இது முத்தாய்ப்பாக ஒரு VGA கேமராவையும் கொண்டுள்ளது. 2000 mAH பாட்டரியுடன், 1.2GHz டூயல் கோர் ப்ராசஸருடன்,  மியூசிக்/வீடியோ பிளேயர், வயர்லெஸ் FM ரேடியோ, WiFi மற்றும் ஹாட்ஸ்பாட், டார்ச் லைட் என பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ஜியோ சிம் கார்டைப் போல, இந்தக் குறைந்த விலை 4G போனும் கல்லாக் கட்டுமா? பொறுத்திருந்துப் பார்ப்போம்!



Trending Articles

Sponsored