ஹூவாயுடன் இணைந்து லிமிட்டெட் எடிஷன் மொபைலை வெளியிட்டது கே.எஃப்.சி!லிமிட்டெட் எடிஷன் தயாரிப்புகள் உலகம் முழுவதுமே பிரபலமானது. சீனாவில் தனது 30 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கும் KFC நிறுவனம், இதைக் கொண்டாடும் வகையில் லிமிட்டெட் எடிஷன் மொபைல் ஒன்றை வெளியிடுகிறது. பிரபல மொபைல் நிறுவனமான ஹூவாயுடன் இணைந்து இந்த மொபைலைத் தயாரித்திருக்கிறது கே.எஃப்.சி.

Sponsored


ஏற்கெனவே சந்தையில் கிடைக்கும் ஹுவாய் என்ஜாய் 7 ப்ளஸ் மாடல் மொபைலில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். கே.எஃப்.சியின் நிறமான சிவப்பில் இருக்கிறது இந்த லிமிட்டெட் எடிஷன் மொபைல். கே.எஃப்.சி  தாத்தாவின் உருவமும் பின்புறத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

Sponsored


5.5 இன்ச் தொடுதிரை, ஸ்னாப்டிராகன் 425 புராசஸர், 3 ஜிபி ரேம் திறன் கொண்ட இந்த மாடலில் 3020 mAh பேட்டரி இருக்கிறது,.

Sponsored


”கே.ஃப்.சி தாத்தாவும், அந்த சிவப்பு நிறமும்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது” என்கிறது கே.எஃப்.சி நிறுவனம்.
இந்த மொபைலில் பிரத்யேக மியூஸிக் ஆப்-பும் இருக்கிறது. கே.எஃப்.சி உணவகத்தின் உள்ளே இருக்கும்போது இந்த ஆப் மூலம் நமக்குப் பிடித்த ப்ளேலிஸ்ட்டை உருவாக்கவும், ஷேர் செய்யவும் முடியும்.Trending Articles

Sponsored