1000 ரூபாயில் மொபைல்கள்... என்ன என்ன வசதிகள் தந்திருக்கிறது நோக்கியா? #Nokia105



நாஸ்டால்ஜியா ஃபீல் கொடுக்கிறோம் என நோக்கியா களம் இறங்கி 3310 மொபைல் மாடலை மீண்டும் வெளியிட்டது. ஆனால், ஏனோ ரசிகர்களுக்கு அந்த கம்பேக் மீது ஆர்வம் வரவில்லை. 3310 மாடலையே விலையாக வைக்கும் ஐடியா சுவாரஸ்யம்தான். ஆனால், விலை ரொம்பவே அதிகம் என்றனர் நோக்கியா பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். இந்தக் குறையைத் தீர்க்க வேறு ஒரு ஐடியாவுடன் வந்திருக்கிறது நோக்கியா டீம்.

Sponsored


நோக்கியா 130 மற்றும் நோக்கியா 105 என இரண்டு மாடல்களை இப்போது சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்த ஃபின்லாந்து நிறுவனம். ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் நம்பிக்கையான பிராண்டு மொபைலே இல்லை என்ற குறையை இந்த மாடல்கள் தீர்க்கும் என திடமாக நம்புகிறது நோக்கியா.

Sponsored


விலை:
நாளை முதல் (ஜூலை 19) கடைகளில் கிடைக்கவிருக்கும் நோக்கியா 105 மாடலில் இரண்டு வேரியன்ட்கள் இருக்கின்றன. ஒரே ஒரு சிம் கொண்ட வேரியண்ட் 999 ரூபாய்க்கும், இரண்டு சிம்கள் கொண்ட வேரியண்ட் 1149 ரூபாய்க்கும் கிடைக்கும். நோக்கியா 130 மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் சிங்கிள் சிம், டபுள் சிம் வேரியன்ட்கள் உண்டு

Sponsored


நிறம்:
நோக்கியா 105 மாடல் நீலம், வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கும். மேட் ஃபினிஷ் மொபைலுக்கு ஒரு நல்ல லுக்கை கொடுக்கிறது. நோக்கியா 130 மாடல் சற்று வித்தியாசமாக சிவப்பு, க்ரே மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கும். 

நோக்கியா 105:
பாலிகார்பனேட் பாடியுடன் வரும் இந்த மாடல் முந்தைய 105 மாடலை நன்றாகவே நினைவூட்டுகிறது. மைக்ரோ யூ எஸ் பி போர்ட்டும், 3.5 எம் எம் ஆடியோ ஜாக்கும் மொபைலின் மேற்புறத்தில் வைத்திருக்கிறார்கள். 4 எம்.பி ரேம் என்பது இந்தக் காலத்துக்கு நம்ப முடியாத ஒன்றுதான். ஆனால், இந்த மொபைல் அந்த ரேமிலும் வேகமாகவே இயங்கும் என்கிறது நோக்கியா. ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியும் வெறும் 4 எம்.பிதான். 2000 காண்டாக்ட்ஸ் மற்றும் 500 குறுஞ்செய்தி வரை மட்டுமே இதில் சேமித்து வைக்க முடியும். 800Mah பேட்டரி என்றாலும், சார்ஜ் விஷயத்தில் வாரக்கணக்கில் நின்று விளையாடும் நோக்கியா 105. ஸ்னேக் கேமும், எஃப். எம் வசதியும் நம்மை பழைய நினைவுகளுக்குக் கொண்டு செல்லலாம்.

நோக்கியா 3310 மீம்ஸ்

நோக்கியா 130:
நோக்கியா 105 மாடலுக்கு சின்ன அண்ணன் நோக்கியா 130. 1020 mAh பேட்டரி ஸ்டேண்ட்பை நேரத்தை கூட்டுகிறது. ரேம் அதே 4.எம்.பி தான் என்றாலும் ஸ்டோரேஜில் 4 எம்பி கூட்டி 8 எம்.பி தந்திருக்கிறார்கள். கூடுதல் ஸ்டோரேஜுக்கு 32 ஜி.பி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு போட முடியும். இந்த மாடலில் ப்ளூடூத் வசதியும் உண்டு. 

”இந்தியாவில் இன்னமும் 40 கோடி பேர் இணையம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு அழைத்துப்பேசவும், குறுஞ்செய்திகளுக்காகவும் மட்டுமே மொபைல் தேவைப்படுகிறது. அந்த வாடிக்கையாளர்கள் தான் எங்கள் டார்கெட்” என்கிறது நோக்கியா.

நோக்கியா 105 மாடல் முதலில் அறிமுகமானபோது 20 கோடிக்கும் அதிகமான மொபைல்கள் விற்றன. இந்த முறை என்ன செய்யும் என்பதைப் பார்ப்போம்.



Trending Articles

Sponsored