ஐபோன் 8-ல் இடம்பெறப்போகும் விஷயங்கள் இவைதானா? #iPhone8



Sponsored



தற்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த முறையும் ஐபோனைப் பற்றிய வதந்திகள் உலகம் சுற்றத்துவங்கிவிட்டன. ஐபோன் பற்றிய ரகசியங்களை ஆப்பிள் என்னதான் ரகசியமாக வைத்திருந்தாலும் எப்படியும் வருடந்தோறும் சில செய்திகளாவது வெளியே வந்துவிடும். அதுவும் இது ஐபோனின் 10-வது ஆண்டு என்பதால், ஆப்பிள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ஐபோன் 7 மாடல் சந்தைக்கு வருவதற்கு முன்பாகவே டூயல் கேமரா, 3.5 mm ஆடியோ ஜாக் இல்லாதது போன்ற செய்திகள் வெளிவந்தன. இறுதியில் அதுவே உண்மையானது. அதேபோல இந்த முறையும் வெர்ட்டிக்கல் டூயல் கேமரா, டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்ட டச் ஐ.டி, ஐரிஸ் ஸ்கேனர், விளிம்புகளற்ற டிஸ்ப்ளே என செய்திகள் வெளிவந்துள்ளன. இதுமட்டுமின்றி ஐபோன் 8-ன் டிசைன் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. (யார் கண்டது? ஒன்ப்ளஸ் 6-ம் கூட இப்படியே இருக்கலாம்!) அப்படி ஐபோன் 8-ல் இடம்பெறப்போகும் அம்சங்கள் எனக் கருதப்படுபவை என்னென்ன தெரியுமா?

Photo Credits : Forbes

Sponsored


டூயல் கேமரா:

Sponsored


ஐபோன் 7 போலவே இதிலும் டூயல் கேமராக்கள் இடம்பெறுவது உறுதி. ஆனால் ஐபோன் 7-ல் ஹோரிஸோன்டலாக இடம்பெற்ற இந்த கேமராக்கள், இந்த முறை வெர்ட்டிக்கலாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளிவந்த படங்களும் இதையேதான் உறுதி செய்கின்றன. வெர்ட்டிக்கல் டூயல் கேமராக்கள்தான் ஆக்மென்டட் ரியாலிட்டி அப்ளிகேஷன்களுக்கு சிறந்ததும் கூட. காரணம் மொபைலை லேண்ட்ஸ்கேப்பாக மாற்றி பயன்படுத்தும் போது, டூயல் கேமராக்கள் நன்கு பரந்து இயங்குவதற்கு இது உதவும். இவை 3D கேமராக்களாக இருக்கும் எனவும் தெரிகிறது. 

விளிம்புகளற்ற டிஸ்ப்ளே:

3 x 4 கீ-பேட், Qwerty கீ-பேட், சாதாரண டச் ஸ்க்ரீன், OLED டிஸ்ப்ளேக்கள் என போனின் 'முகம்' தொடர்ந்து மாறிக்கொண்டேதான் இருக்கிறது. அதில் லேட்டஸ்ட்டான அம்சம்தான் இந்த  Bezel-less டிஸ்ப்ளேக்கள். இந்த ட்ரெண்ட்டை இன்னும் வலிமையாக்கும் வகையில் ஆப்பிளும்  bezel-less டிஸ்ப்ளேக்களுக்கு மாற தயாராகிவருகிறது. இதனால் Touch ID எனப்படும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனரை இடம் மாற்றுவது ஆப்பிளுக்கு சவாலாக இருக்கும். டிஸ்ப்ளேவிற்கு கீழாக இந்த டச் ஐ.டி-யின் செயல்பாடு இருப்பது போல வடிவமைக்கப்படவும் வாய்ப்புண்டு. இத்துடன் இணைத்து பேசப்படும் இன்னொரு விஷயம் ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள பவர் பட்டன் ஃபிங்கர்பிரின்ட் சென்சார். ஆப்பிள் நிறுவனம் இதற்கு காப்புரிமை பெற்றுள்ளதால் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் ஆனது, பவர் பட்டனிலேயே இடம்பெறலாம் என்கின்றனர் டெக்கீஸ். இதனை உறுதி செய்வது போலவே, லீக் ஆன படங்களில் பவர்பட்டன் பெரிதாக அமைந்திருக்கிறது.

Photo Credits : Forbes

ஐபோன் 8-ல் ஃபங்க்ஷன் ஏரியா இடம்பெறும் என்பது ஏற்கெனவே வெளிவந்த செய்திதான். தற்போது கூடுதலாக இன்னொரு விஷயமும் தெரியவந்துள்ளது. அதாவது 4.7 இன்ச் டிஸ்ப்ளேவில் இருந்து 5.8 இன்ச் சைஸ் கொண்ட டிஸ்ப்ளேக்கள் வரலாம் என்பதுதான் அது. இதனால் மல்ட்டிமீடியா அப்ளிகேஷன்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் AR போன்றவற்றில் இன்னும் கில்லியாக மாறும் ஐபோன் 8.

ஆடியோ ஜாக்?

ஐபோன் 7 உடன் வெளிவந்த ஏர் பாட்ஸ் பெரிய அளவில் ஆப்பிளுக்கு சிக்கல்கள் எதையும் உண்டாக்கவில்லை. எனவே இந்த முறையும் 3.5 mm ஆடியோ ஜாக் இருக்காது. அதேபோல லைட்னிங் போர்ட்டும் தொடரும். 

ஐரிஸ் ஸ்கேனர்:

பாஸ்கோடு மற்றும் பாஸ்வேர்டு போன்றவற்றிற்கு அடுத்து அதிகம் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் பயோமெட்ரிக் தகவல்களாகவே இருக்கின்றன. இதற்கு உதாரணம்தான் இன்று நம் டிவைஸ்களில் இருக்கும் ஃபிங்கர்பிரின்ட் சென்சார்கள். தற்போது இவற்றிற்கு அடுத்ததாக இடம்பிடித்திருப்பது ஐரிஸ் ஸ்கேனர் எனப்படும் கருவிழி ஸ்கேனர்கள்.  ஃபிரன்ட் கேமரா மூலமாக இது இயங்கும். சாம்சங் S8+ -ல் இடம்பெற்ற இந்த அம்சம், ஐபோன் 8 மூலம் ஆப்பிளிலும் இடம்பிடிக்கலாம். இத்துடன் முக அடையாளங்களை வைத்து, நபர்களை அடையாளம் காணும் ஃபேஷியல் ரெககனைஷன் வசதியும் எனத் தெரிகிறது.

Photo Credits : Forbes

இன்னும் என்னென்ன?

ஐபோன் 8-ன் கூடுதல் சிறப்பம்சங்கள், டிசைன் போன்றவை குறித்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், இன்னும் அடிப்படை அம்சங்கள் பற்றிய தகவல்கள் மட்டும்தான் வெளியாகாமல் இருக்கின்றன. ரேம், கேமரா திறன், சிப் செட், வயர்லஸ் சார்ஜிங் இருக்கிறதா இல்லையா போன்றவற்றில் மட்டும் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

எப்போது விற்பனை?

செப்டம்பர் மாதம் நடக்கும் ஐபோன் அறிமுக நிகழ்ச்சி நடந்து, நவம்பர் மாதம் விற்பனை துவங்குவதுதான் ஆப்பிளின் நார்மல் நடவடிக்கை. ஆனால் இந்த முறை ஐபோன் உற்பத்தி தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை செய்திகள் வெளியானாலும், இன்னும் ஆப்பிள் வைத்திருக்கும் சஸ்பென்ஸ்களால்தான் ஐபோன் 8-ன் சுவாரஸ்யம் கூடுகிறது.


 



Trending Articles

Sponsored