விஷயம் தெரியுமா... ஃபேஸ்புக் டிவி வரப்போகுதாம்!Sponsoredஃபேஸ்புக் ஏற்கெனவே காட்சி ஊடகத்தின் பாதி இடத்தைப் பிடித்துவிட்ட நிலையில் மீதி இடத்தையும் பிடிக்க திட்டமிட்டுவிட்டது. ஆம், ஃபேஸ்புக் டிவி ஆகஸ்ட் மாதம் வரவிருக்கிறது. 

ஸ்மார்ட்போன்களும் இணையப் பயன்பாடும் அதிகரித்துள்ள நிலையில் ஃபேஸ்புக்தான் சமூக வலைதளங்களின் பிக்பாஸாக விளங்கிவருகிறது. அதுமட்டுமல்லாமல் வீடியோக்கள், விளம்பரங்கள் அதிக அளவில் ஃபேஸ்புக் மூலமாகவே மக்களைச் சென்றடைகின்றன. இதனால் டிவி ஓடிக்கொண்டிருக்கும்போதும் ஃபேஸ்புக்கில் விடியோக்களை ரசிப்பவர்கள்தான் அதிகம். 

Sponsored


இந்நிலையில் இதுவரை தொலைக்காட்சிகளுக்குப் போட்டியாக மட்டுமே இருந்துவந்த ஃபேஸ்புக் தளம் இனி தொலைக்காட்சிகளின் இடத்தையே முழுமையாக ஆக்கிரமிக்க முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஃபேஸ்புக் டிவி வரவிருக்கிறது. 

Sponsored


ஃபேஸ்புக் டிவியில் ஒளிபரப்பாகப் போகும் நிகழ்ச்சிகள் தயாராகிவருகின்றன. அவை எப்படிப்பட்டதாக இருக்கும், தொலைக்காட்சியாக ஃபேஸ்புக் டிவி ஜெயிக்குமா என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.
 Trending Articles

Sponsored