ஆன்லைன் மோசடிகள் முதல் உயிருள்ள மெமரி கார்டு வரை... ஆகஸ்ட் மாத டெக் தமிழா! #TechTamizhaSponsoredணக்கம் வாசகர்களே!

இந்த உலகின் மிகச்சிறிய, ஆனால் அதீத தகவல்களை சேமிக்கும் மெமரி கார்டு எந்த நிறுவனத்தினுடையது எனத் தெரியுமா? நீங்கள் யூகிக்கவே முடியாது. 

காரணம் உங்கள் DNA-தான் அந்த மெமரி கார்டு. அந்த DNA-வில் புதிய தகவல்களை பதிவு செய்தால் எப்படி இருக்கும்? சிந்திக்கும்போதே வியப்பாக இருக்கும், இந்த விஷயத்தை நிஜத்தில் செய்து காட்டியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இதோ, அந்தக் கட்டுரை ஆகஸ்ட் மாத டெக் தமிழாவில்!

Sponsored


Sponsored


உங்களுடைய வங்கிக்கணக்கு விவரங்களை திருடாமலே, உங்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முடியும் என்பதையும், இந்தியாவின் பெரிய இ-வாலட் நிறுவனம் எனப்படும் பேடிஎம் நிறுவனத்தையே ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியும் என்பதையும் நம்பமுடிகிறதா? ஆனால் இரண்டுமே நிஜத்தில் நடந்த சம்பவங்கள். எப்படி நடந்தது என்பதை விவரிக்கிறது டெக் தமிழாவின் கவர் ஸ்டோரி.

இத்துடன், புதிதாக சந்தைக்கு வரவுள்ள ஜீரோ பட்ஜெட் ஜியோ போன், அலுவலகத்தின் வாட்ஸ்அப் என அழைக்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய கைஸாலா ஆப், மொபைலுக்குள்ளே ஒளிந்திருக்கும் பிராசஸரின் பணி மற்றும் அது இயங்கும் விதம், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு கேமராவின் விலை, தண்ணீரில் குதித்து தற்கொலை செய்துகொண்ட ரோபோ என வழக்கம்போல டெக் ட்ரீட்டாக மலர்ந்திருக்கிறது இந்த மாத டெக் தமிழா!

கூடுதலாக, சிவகார்த்திகேயன் டிவியில் இருந்து சினிமாவிற்கு செல்லவும், கமல் சினிமாவில் இருந்து டிவிக்கு வரவும் காரணமாக இருந்த ஒருத்தரைப் பற்றிய கட்டுரையும் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. (படிங்க...சர்ப்ரைஸ் கியாரண்டி!)

படித்துவிட்டு கருத்துகளை கமென்ட் செய்யுங்கள். மேலும்,  உங்கள் கருத்துகளை #TechTamizha என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொள்ளலாம்.

இதழை டவுன்லோட் செய்து படிக்க : https://goo.gl/48eFoJ

நன்றி!Trending Articles

Sponsored