லாபம் இல்லை... எப்படி நடக்கிறது ட்விட்டர் வியாபாரம்? #VikatanInfographicsSponsoredஅமெரிக்க பிரச்னையை அதிபர் ட்ரம்ப் அறிவிப்பது முதல் அடுத்த விஜய் படத்தின் டைட்டில் என்ன என்பதை அறிவிப்பது வரை இன்று எல்லாமே ட்விட்டர் மயம் ஆகிவிட்டது. கமல் ட்விட்டுகள் புரியாமல் நம்மைத் திணற வைப்பது போலதான், ட்விட்டர் நிறுவனமும் என்ன செய்வது என்று புரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. காரணம், வருமானம். சமூக வலைதள போட்டியில் ட்விட்டர் பயன்பாடு நிலைத்து நின்றாலும் வருமானத்தில் சற்றே சறுக்கிக் கொண்டிருக்கிறது ட்விட்டர். அதன் வருட வருமான விவரங்கள் இதோ.

ட்விட்டர் வருவுகள்

Sponsored


விளம்பர வருவாய் :

Sponsored


ட்விட்டுகளைப்  ப்ரமோட் செய்ய, ட்விட்டர் கணக்குகளைப் ப்ரமோட் செய்ய, குறிப்பிட்ட டிரெண்டுகளைப் ப்ரமோட் செய்ய என்று தனித் தனியாக ட்விட்டர் நிறுவனம் கட்டணம் பெறுகிறார்கள். இவைதாம் டிவிட்டரின் முக்கிய விளம்பர வருமானம். ட்விட்டரில் விளம்பரங்களைப் போடுவதன் மூலம் வருவதை விட இப்படி ப்ரமோட் செய்வதன் மூலமாகத் தான் அதிக வருமானம் வருகின்றன.

டேட்டா விற்பனை :

இதை டேட்டா விற்பனை என்று சொல்வதை விட டேட்டா லைசென்சிங் என்று சொல்கிறார்கள். ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் ட்விட் செய்வதன் மூலம் கிடைக்கும் டேட்டாக்களை குறிப்பிட்ட காலத்துக்கு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள வழங்கும் உரிமம் தான் இந்த டேட்டா லைசென்சிங்

செலவுகள்:

அன்றாட செலவுகள் :

டேட்டா சென்டர், இன்டர்நெட், மின்சாரம் போன்ற கட்டுமானச் செலவுகள், கன்டன்ட்களை தயார் செய்வதற்கான விலை, சொத்துக்களை வாங்குவதற்கு, சம்பளம், ஊழியர்களுக்கான வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்குவதற்கு ஆகும் செலவுகள்.

நிர்வாகச் செலவுகள் :

சட்ட ஆலோசகர்கள், நிதி ஆலோசகர்கள், பட்டயக் கணக்காளர்கள், கன்சல்டிங் பொறியாளர்கள், மனித வள மேம்பாட்டு ஆலோசகர்கள் போன்றவர்களுக்கும் நிர்வாகத்தை நடத்துவதற்கும் ஆகும் அடிப்படைச் செலவுகளும் இதில் அடங்கும்.Trending Articles

Sponsored