சிம் கார்டுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கு பாஸ்! #HowItWorksSponsored'மனிதர்களின் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு, மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதே போதுமானதாக இருக்கிறது' என்பது ட்விட்டர் மொழி. பிரியமானவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும், பிடிக்காதவர்களிடம் இருந்து விலகியிருக்கவும் தற்போதெல்லாம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனே நமக்குப் போதுமானதாக இருக்கிறது. போனில் வரும் சில அழைப்புகள் நம்மை மகிழ்ச்சியுறச் செய்யும்; சில அழைப்புகள் ஆத்திரமூட்டும்; சில அழைப்புகள் அன்பை பரிமாறும்; சில அழைப்புகள் பயத்தை உண்டாக்கும். இப்படி இத்தனைவிதமான உணர்ச்சிகளை செல்போனுக்குள் இருந்து, நமக்கு கடத்தும் சிம் கார்டுகள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?

Subscriber Identification Module (SIM) என்பதன் சுருக்கம் தான் சிம்.  சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு என சிம் கார்டுக்கு தமிழ் அகராதி அர்த்தம் சொல்கிறது. தற்போது மினி, மைக்ரோ, நானோ என்றெல்லாம் பல சைஸ்களில் மொபைல் போனில் உள்ள சிம் ஸ்லாட்டுக்கு ஏற்ப இவை பயன்படுத்தப்படுகின்றன. 1991-ம் ஆண்டில் முனிச் நகரில் இயங்கும் Giesecke & Devrient என்ற நிறுவனம்தான் முதன்முதலாக சிம் கார்டை உருவாக்கியது. அப்போது கிரெடிட் கார்டு போன்று இருந்த சிம் கார்டின் அளவு, அதன்பின் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது விரல் நுனி அளவுக்கு சுருங்கிவிட்டது. இதனால் மற்ற உதிரிபாகங்களுக்கான இடவசதியும் ஏற்பட்டது.

Sponsored


உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம் போன்களுக்குத்தான் பொதுவாக சிம்கள் தேவைப்படுகின்றன. சர்வதேச கார்டு உற்பத்தியாளர்கள் அமைப்பின் தகவலின்படி, இன்றைய தேதியில் 700 கோடிக்கும் அதிகமான டிவைஸ்கள், செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு மட்டும் சுமார் 540 கோடி சிம்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

Sponsored


சிம் கார்டின் பின்புறம் சிறிய சிப் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். இந்த சிப்பில் தான் நெட்வொர்க் தொடர்பான தகவலும், சந்தாதாரரின் விவரங்களும் சேமிக்கப்படும். சிம் கார்டு இல்லாமல் ஜி.எஸ்.எம் போனால் மொபைல் நெட்வொர்க்குடன் தொடர்பு கொள்ளமுடியாது. மனிதனின் கைரேகை போல இந்த சர்வதேச தனித்தன்மை வாய்ந்த எண்ணானது ஒவ்வொரு சிம் கார்டுக்கும் வேறுபடும். இதன்மூலம், ஒவ்வொரு சிம் கார்டையும் உலகின் எந்த மூலையிலும் தனியாக இனம் காண முடியும். அதேபோல, ஒவ்வொரு சிம் கார்டிலும் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய வகையில், Authentication Key, கார்டு லாக் ஆனால் அதை அன்லாக் செய்யக்கூடிய PUK எண் போன்ற விவரங்கள் இருக்கும். இவை தவிர்த்து, உள்ளூர் நெட்வொர்க் பற்றிய தற்காலிகத் தகவல், குறுஞ்செய்திகள் மற்றும் தொடர்பு எண்களையும் கூட சேமித்துக்கொள்ளும் வகையில் தற்போது சிம் கார்டுகள் கிடைக்கின்றன.

சிம் கார்டை மொபைல் போனில் செலுத்தியதும், அதில் உள்ள சர்வதேச தனித்தன்மை வாய்ந்த எண்ணையும் (IMSI),  Authentication Key-யையும் மொபைல் போன், நெட்வொர்க்கை அக்சஸ் செய்வதற்காக அருகே உள்ள டவருக்கு ரெக்வெஸ்ட் ஒன்றை அனுப்பும். இரண்டையும் நெட்வொர்க் பரிசோதித்து, என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவலை சிம் கார்டுக்கு சரிபார்க்க அனுப்பும். இத்தகவலை சிம் கார்டு சரியாக டிகிரிப்ட் செய்த பின்னர்தான் நெட்வொர்க்கிடமிருந்து வயர்லெஸ் சிக்னல் கிடைக்கும். பொதுவாக புதிதாக சிம் கார்டை மொபைல் போனில் செலுத்தியதும், இதனால்தான் சிக்னல் கிடைக்க சிறிது தாமதமாகிறது (சிக்னல் கிடைக்க எப்போதுமே கொஞ்சம் காத்திருக்கனும் பாஸ்!). ஒரு மொபைலிலிருந்து மற்றொரு மொபைலுக்கு மாற்றும்போதும், இதே வேலைதான் நடைபெறுகிறது. e-Sim (Embedded SIM) என்றழைக்கப்படும் SIM-கள் தான் எதிர்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. டிவைஸிலேயே பொருத்தப்பட்டு வரும் இதை, சிம் கார்டைப்போல மாற்றமுடியாது. ஆனால், மொபைல் மேலும் மெலிதாக மாற இந்த முறை உதவும் எனக்கூறப்படுகிறது.

கம்மி விலைக்கு... ஏன் சிலநேரத்துல இலவசமாகவே கிடைக்குற சிம் கார்டுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கு பாஸ்!Trending Articles

Sponsored