“இப்போதைக்கு இவ்ளோதான்… ஒரு வாரம் எதையும் லீக் பண்ணாதீங்க..!” - ஹேக்கர்களுக்கு HBO-வின்ஆஃபர்Sponsoredஒரு சின்ன முன்னுரை:

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒருபுறம் பயங்கர ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்க, HBO வோ வேறு சில காரணங்களுக்காக தலைப்புச் செய்தியில் இருந்து வருகிறது. அதற்குக் காரணம் “White Hats” என்று தங்களை அழைத்துக்கொண்டு “HBO is falling” என்ற பெயரில் HBO வின் கஜானாவை காலி செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கும் ஹேக்கர்கள்.  இதுவரை கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஸ்கிரிப்ட் உள்பட பல்வேறு HBO சீரியல்களின் வெளிவராத எபிசொட்களை வெளியே விட்டிருக்கும் ஹேக்கர்கள் சென்ற வாரம் மேலும் ஒரு அதிரடியைச் செய்தனர். அலுவலக இ-மெயில்களை வெளியே கசியவிட்டு மேலும் தகவல்கள் வெளிவராமல் இருக்க பணம் தர வேண்டும் என்று கட்டளையிட்டனர். முதலில் அந்தத் தொகை எவ்வளவு என்று வெளிவராத நிலையில், பின்பு அது 6 மில்லியன் டாலர்கள் என்று தெரியவந்துள்ளது. அதுவும் தங்களுக்கு பணமாக இல்லாமல் டிஜிட்டல் கரன்சியான பிட்காயின்களாக வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.

Sponsored


எச்சரிக்கை மேல் எச்சரிக்கை!

Sponsored


HBO அதற்கு மசியவில்லை என்று தெரிந்தவுடன், கூடுதல் எச்சரிக்கையாக, கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகத்தில் நடித்த நடிகர்களின் மொபைல் போன் எண்கள் தங்களிடம் இருப்பதாகவும் ஹேக்கர்கள் தெரிவித்தனர். 3 நாள்கள் மட்டுமே உங்களுக்கு அவகாசம் என்றும் கெடுவும் வைத்தனர். முதலில், ஹேக்கர்கள் யாரென்று கண்டுபிடிப்போம் என்று கோதாவில் இறங்கிய HBO தற்போது இந்தப் பிரச்னையின் வீரியத்தை உணர்ந்துள்ளது. ஹேக்கர்களைச் சாந்தப்படுத்த தற்போது ஒரு கணிசமான தொகையை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு வாரத்துக்கு எதுவும் வெளியிட வேண்டாமெனமும், அதற்குள் கேட்ட தொகையை பிட்காயின்களாக மாற்றித் தருவதாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், தங்கள் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஹேக்கர்களுக்கு பாராட்டுப் பத்திரமாக ஒரு மடல் எழுதியுள்ளது.

“நீங்கள் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள். தொழில்முறை வேண்டுகோளாக நீங்கள் கொடுத்த கெடுவை ஒரு வாரமாக நீட்டிக்க வேண்டுகிறோம். இந்தக் கால அவகாசத்துக்குள், நீங்கள் கேட்டத் தொகையை பிட்காயின்களாக மாற்றித் தருகிறோம். இதை நீங்கள் செய்வதற்கு bug bounty payment ஆக $250,000 தந்து விடுகிறோம்.”

Bug Bounty Payment

ஹேக்கர்கள்  கேட்ட பணத்தைவிட இது மிகவும் குறைவுதான் என்றாலும், கால அவகாசம் பெறவே HBO இதைச் செய்வதாக தெரிகிறது. அது சரி, அது என்ன bug bounty payment? பொதுவாக, சைபர் உலகில், bug bounty payment என்பது இணைய ஜாம்பவான்களின் மென்பொருள்களில் உள்ள செக்யூரிட்டி பிழைகளைச் சுட்டிக் காட்டுவோர்க்கு கிடைக்கும் பரிசுத் தொகை. இவ்வகை அன்பளிப்புகள் அளிப்பது ஒரு அன்றாட நிகழ்வே! உதாரணமாக, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் இவ்வகை பரிசுகள் பலவற்றை அளித்துள்ளது. ஆனால், HBO விஷயத்தில் ஹேக்கர்கள்  இதை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் உள்பட உலகமே இந்த ஹேக்கிங் சம்பவத்தை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும், எப்போது புது எபிசொட் லீக் ஆகும் என்று இந்திய ரசிகர்களும் இணையதள செய்திகளை  அவ்வப்போது மேய்ந்த வண்ணம் உள்ளனர்.Trending Articles

Sponsored